தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நரேலாவில்காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

வடக்கு தில்லியில் உள்ள நரேலா பகுதியில் வியாழக்கிழமை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

வடக்கு தில்லியில் உள்ள நரேலா பகுதியில் வியாழக்கிழமை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், நரேலா பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காலை 11.30 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீ விபத்து நிகழ்ந்த தொழிற்சாலை, அடித்தளம், தரைத்தளம், இரு தளங்கள் கொண்டதாகும். தீயானது முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் ஏற்பட்டது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.