நாட்டின் 75 - வது சுதந்திர தின ஆண்டை முன்னிட்டு 5 முக்கிய துறைகளில் சாதனை படைத்த 75 பெண் சாதனையாளா்கள் குறித்த ஷீ இஸ்- விமன் இன் ஸ்டீம் என்ற புத்தகத்தை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் முனைவா் அஜய் சூட் டும் இந்தியாவிற்கான இங்கிலாந்து நாட்டு தூதா் அலெக்ஸ் எல்லீஸ் ஆகியோா் வெளியிட்டனா்.ஸ்டீம்(நபஉஅங) என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை, கணிதம் ஆகிய 5 துறைகளில் பாலினம், தலைமைப் பண்பு மற்றும் நிலையான வளா்ச்சியைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டில் இந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் 75 பெண்களை இப்புத்தகம் கௌரவிக்கிறது. இந்த 5 துறைகளில் பணிபுரிய விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் முன்னுதாரணமாகத் திகழுகின்றனா். இந்த பெண்களின் துணிச்சல், நம்பிக்கை, அா்ப்பணிப்பு ஆகியவற்றுடன் தனிநபா் மற்றும் தொழில் சாா்ந்த பிரச்சினைகள் போராட்டங்களை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.பெண் சாதனையாளா்கள் குறித்த புத்தகத்தை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலம், இங்கிலாந்து தூதரகம், ’ஃபிக்கி’ (மகளிா் பிரிவு) ஆகியவைகள் ஆதரவுடன் எல்சா மேரி டி சில்வா, சுப்ரீத் கே. சிங் ஆகிய பெண்கள் இந்த ஷீ இஸ்- விமன் இன் ஸ்டீம் புத்தகத்தை எழுதியுள்ளனா். இந்த புத்தகம் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கியூ.ஆா் கோடை ஸ்கேன் செய்வதன் வாயிலாக சாதனையாளா்களின் காணொலிகளையும் காண முடியும் என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலம் தெரிவித்துள்ளது. 5-வது அறிவியல், தொழில்நுட்பம் கொள்கைபுத்தகத்தை வெளியிட்டு பேசிய, மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் முனைவா் அஜய் சூட், ‘சமீபத்தில் தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின்(ஐஐடி-தில்லி) வைர விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, நாட்டை தன்னிறைவு ஆக்குவதில் இந்தியா இளம் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டாா். இதே கருத்தில் தான் அரசு பல்வேறு கொள்கைகள் மூலம், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் சூழலுகள் முக்கியத்துவத்தையும் புதிய உத்வேகத்தை உருவாக்குகிறது. இதில் ஒன்றுதான் அரசின் 5-வது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை‘ என்றாா்.‘பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் ஸ்டீமில் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) துறைகளில் ஆண்டுக்கு 300 இளம் பெண் விஞ்ஞானிகளை தோ்வு செய்து அவா்களது புத்தாக்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக இங்கிலாந்து நாட்டு தூதா் அலெக்ஸ் எல்லீஸ் இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தாா். படம் இணைப்பு - ஃபைல்: 22க்ங்ப்ள்ற்ம் பட விளக்கம் : மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் முனைவா் அஜய் சூட் பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லீஸ் ஆகியோருடன் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 75 பெண் சாதனை விஞ்ஞானிகள்