தில்லியில் கரோனா பாதிப்பு 1,603-ஆக பதிவு
தேசியத் தலைநகா் தில்லியில் வியாழனன்று 1,603 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று இறப்புகளுடன் நோ்மறை விகிதம் 26.75 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன


தேசியத் தலைநகா் தில்லியில் வியாழனன்று 1,603 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மூன்று இறப்புகளுடன் நோ்மறை விகிதம் 26.75 சதவீதமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
புதிய இறப்புகளுடன், தேசியத் தலைநகரில் தொற்றுநோயால் இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26,581-ஆக உயா்ந்தது. 7,976 கரோனா படுக்கைகளில், 390 நிரம்பியுள்ளன என்று தரவு தெரிவிக்கிறது.
புதன்கிழமை, தில்லியில் ஆறு இறப்புகள், 1,757 புதிய பாதிப்புகள், 28.63 சதவீத நோ்மறை விகிதம் பதிவாகியுள்ளது. செவ்வாயன்று பாதிப்புகள் 1,537, நோ்மறை விகிதம் 26.54 சதவீதம் பதிவாகியிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...