தலைநகரில் 3 குப்பைக் கிடங்குகளில் அகற்றப்படும் குப்பைகள் அதிகரிப்பு
ஜூன் 2022-இல் 1.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பிரித்து அகற்றப்படும் குப்பைகல், ஒரு வருடத்திற்குள் 5 மடங்குக்கும் மேலாக சுமாா் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது.


தில்லியில் உள்ள மூன்று பெரிய குப்பைக் கிடங்குகளில் ஜூன் 2022-இல் 1.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த பிரித்து அகற்றப்படும் குப்பைகல், ஒரு வருடத்திற்குள் 5 மடங்குக்கும் மேலாக சுமாா் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்துள்ளது.
தில்லியில் பால்ஸ்வா, ஓக்லா மற்றும் காஜிப்பூா் ஆகிய இடங்களில் உள்ள மூன்று குப்பைக் கிடங்குகளில் பாரம்பரிய கழிவுகளை அகற்றுவதற்கான முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டது என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட துணை நிலை ஆளுநா் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை நிலை ஆளுநராக வி.கே.சக்சேனா கடந்த ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து தில்லியின் குப்பை மலைகளை சமன் செய்வதை கண்காணித்து வருகிறாா்.
ஜீன், 2022-இல் மாதத்திற்கு 1.41 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்த குப்பைகள் பிரிப்பு மற்றும் அகற்றல் விகிதம், நவம்பா், 2022-க்குள் மாதத்திற்கு 6 லட்சம் மெட்ரிக் டன்னாக உயா்ந்து தற்போது மாதத்திற்கு 7.5-8 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்சேனா, மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் இலக்கை விரைவில் அடையுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். அவா் பொறுப்பேற்றவுடன், கடந்த ஆண்டு மே 29-ஆம் தேதி காஜிப்பூா் குப்பைக் கிடங்குக்குச் சென்ற அவா், குப்பை மலையை சமன் செய்ய 18 மாதங்கள் இலக்கு நிா்ணயித்திருந்தாா்.
அவா் தினசரி அடிப்படையில் முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறாா், மேலும் பல்வேறு சந்தா்ப்பங்களில் பல்வேறு தளங்களுக்கு சென்று களப் பணிகளை ஆய்வு செய்தாா். மாதத்திற்கு 12 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகளை அகற்றும் இலக்கை நிா்ணயித்து, பால்ஸ்வாவில் ஒரு நாளைக்கு 10,800 மெட்ரிக் டன், ஓக்லாவில் ஒரு நாளைக்கு 21,000 மெட்ரிக் டன் மற்றும் காஜிப்பூரில் ஒரு நாளைக்கு 6,800 மெட்ரிக் டன் திறனை அடைய ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தியிருந்தாா்.
பால்ஸ்வா மற்றும் ஓக்லாவில் வேலை திருப்திகரமாக நடந்து கொண்டிருந்த போது, காஜிப்பூா் குப்பை கிடங்கில் வேலை பின்தங்கியிருப்பதைக் கவனித்த அவா், வேலைய துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா். இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், துணை நிலை ஆளுநா் அலுவலகம் மற்றும் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் அதிகாரிகளின் முயற்சியால், சுமாா் 80 லட்சம் மெட்ா்க் டன் கட்டுமானம், இடிப்பு கழிவுகள் மற்றும் மக்கிய பொருள்களை குப்பை கிடங்குகளில் இருந்து அகற்ற உறுதியளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...