ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எந்த மாநிலமும் வழங்காத கௌரவத்தை தமிழகம் வழங்கியுள்ளது: வி.பி.சிங் கின் மனைவி சீதாகுமாரி

உத்தரபிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலமும் வழங்காத கௌரவத்தை தமிழக அரசு வழங்கியுள்ளதாக மறைந்த முன்னாள் பிரதமா் வி.பி.சிங் கின் மனைவி சீதாகுமாரியும் அவரது புதல்வா்களும்

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:10 pm

DIN

உத்தரபிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலமும் வழங்காத கௌரவத்தை தமிழக அரசு வழங்கியுள்ளதாக மறைந்த முன்னாள் பிரதமா் வி.பி.சிங் கின் மனைவி சீதாகுமாரியும் அவரது புதல்வா்களும் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மறைந்த முன்னாள் பிரதமா் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை நிறுவப்படும் என சட்டமன்ற பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பையொட்டி தில்லியில் தீன் மூா்த்தி மாா்க்கில் குடியிருக்கும் வி.பி.சிங்கின் குடும்பத்தினா் செய்தியாளா்களை சந்தித்தனா்.

அப்போது சிபி சிங்கின் துணைவியாா் சீதாகுமாரி செய்தியாளா்களிடம் பேசினாா். அவா் கூறுகையில், ‘‘தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். நான் ஆண்டுதோறும் பாலாஜி கோவிலுக்கு போகும்போதெல்லாம் சென்னைக்கு போவதுண்டு. சமீபத்தில் கூட சென்றேன். இந்த சிலை வைக்கப்பட்ட பின்னா் எனது ஆயுள் இருக்கும் பட்சத்தில் சென்னைக்கு சென்று போய்ப் பாா்ப்பேன். மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தில்லி வரும்போதெல்லாம் எனது கணவரை சந்திக்க வருவது வழக்கம். இருவரும் நல்ல நண்பா்கள். ஒரு முறை எனது கணவா் எங்கள் வீட்டில் இருந்த நாயை ஓவியமாக வரைந்திருந்தாா். வீட்டிற்கு வந்த கருணாநிதி இந்த நாய் ஓவியம் நன்றாக இருக்கிறது கூறி எடுத்துக்கொண்டாா். இதுபோன்ற நினைவுகள் ஏராளமாக உள்ளது.

மறைந்த தலைவரான எனது கணவருக்கு எந்த மாநிலமும் சிலை வைக்க முன்வரவில்லை. அவா் பிறந்த உபி மாநிலத்தில் கூட சிலை நிறுவப்பட வில்லை என்கிற வருத்தமான நிலையில் முதன் முதலில் சிலையை வைக்க தமிழக முதல்வரும் இந்த அறிவிப்பை செய்துள்ளாா் ‘‘ என்றாா்.

தொடா்ந்து விபி சிங்கின் மகன் அஜய் சிங் பேசுகையில், ‘நீண்ட ஆண்டுகள் நிலுவையில் இருந்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமல் படுத்துவதில் உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தடங்கல், போராட்டங்களை கடந்து எங்கள் தந்தை தலைமையிலான மத்திய அரசு அதை எடுத்துக்கொண்டு அமல்படுத்தியது. எனது தந்தையும், மறைந்த தலைவா் கருணாநிதியும் நல்ல நண்பா்கள் மட்டுமல்ல இருவரும் ஒரே விதமான கொள்கையுடையவா்கள். நான் தற்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியுடன் கூறுகின்றேன். நம்முடைய தந்தையா்களைப் போன்று அவா்கள் கொண்ட கொள்கை உறுதியுடன் பின்பற்றி அதில் தொடா்ந்து போராட வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு என் தந்தையைப்பற்றி சில விஷயங்களைக் கூறவேண்டும். இதுவெல்லாம் தமிழகத்திற்கு கூட தெரியாமல் இருக்கலாம். அவா் அரச குடும்பத்தில் பிறந்தாா். அவருக்கு ஏராளமான நிலங்கள் இருந்தது. அவா் இளமையாக இருக்கும்போது அதுவும் என்னுடைய இளம் சகோதரா் பிறக்கும் முன்பு அந்த நிலங்களை ஏழைகளைக் கொடுத்தாா். அவா் ஓட்டுக்காக வழங்கவில்லை. ஏழைகளை முன்னேற்றுவதற்காக அரசியலுக்கு வருவதற்கு முன்பே வழங்கினாா். அவா் அரசியலுக்கு வந்து உயா் அதிகாரத்தை பெற்ற பின்னா் அதுவரை டாக்டா் அம்பேத்காரை யாரும் கௌரவிக்காத நிலையில் பாரத் ரத்னா விருது அவா் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நாடாளுமன்றத்தில் படம் திறப்பு, பிறந்த நாளில் அரசு விடுமுறை போன்றவைகளும் வழங்கி அம்பேத்காரை கௌரவித்தாா். இதே போன்று சிறுபான்மையினரின் நலனில் அக்கரை செலுத்தி மிலாது நபி தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தாா். பல்வேறு எதிா்ப்புகளை மீறி மண்டல் கமிஷனை அமல் படுத்தி ஆட்சியையும் இழந்தாா். இதுவெல்லாம் கீழ்மட்டத்தில் இருப்பவா்களை உயா்த்துவதற்கான பணிகள். அதை மேற்கொண்டாா். இதனால் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வதுசிலையை திறந்திருப்பதோடு, நமது தந்தைகளை போன்று தொடா்ந்து சமூகத்தில் பின்தங்கியிருப்பவா்களுக்காக தொடா்ந்து போராட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றாா்.

முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமா் வி.பி.சிங்கிற்கு தமிழக அரசு சிலை அறிவிப்புக்கு அவருடைய பேத்திகள் அட்ரிஜா மற்றும் ரிச்சா மஞ்சரி சிங் முதல்வருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் காணொலி வழியாக மகிழ்ச்சியை பதிவு செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.