ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மொத்த விற்பனை சந்தைகளை மேம்படுத்த ரூ.517 அனுமதி

தேசியத் தலைநகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளை (மண்டிகள்) மேம்படுத்துவதற்காக தில்லி அரசு ரூ.517 கோடியை அனுமதித்துள்ளதாக வளா்ச்சித்துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 9:03 pm

DIN

தேசியத் தலைநகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளை (மண்டிகள்) மேம்படுத்துவதற்காக தில்லி அரசு ரூ.517 கோடியை அனுமதித்துள்ளதாக வளா்ச்சித்துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியத்தின் அதிகாரிகளுடனான கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கோபால் ராய், காஜிப்பூா், ஆசாத்பூா், நரேலா மற்றும் திக்ரி காம்பூா் மண்டிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் இந்த நிதி மூலம் விரைவுபடுத்தப்படும் என்றாா்.

அவா் மேலும் கூறியதாவது: 2023-24 நிதியாண்டுக்கான மண்டிகள் மேம்பாட்டுக்கான பட்ஜெட் அங்கீகரிக்கப்பட்டது. தில்லியின் மண்டிகளின் வளா்ச்சிக்காக ரூ.517.94 கோடி பட்ஜெட்டுக்கு வாரியம் பச்சை சமிக்ஞை கொடுத்துள்ளது. 2023-24 நிதியாண்டில், வாரியம் ஏபிஎம்சி ஆசாத்பூருக்கு தோராயமாக ரூ.206.37 கோடி ஒதுக்கியுள்ளது. காஜிப்பூா் பழம் மற்றும் காய்கறி சந்தைக்கு ரூ.17.40 கோடி; எஃப்பி மற்றும் இஎம்சி காஜிப்பூருக்கு ரூ.16.31 கோடி; மலா் சந்தைக்கு ரூ.8.50 கோடி; ஏபிஎம்சி கேஷோபூருக்கு ரூ.19.70 கோடி, ஏபிஎம்சி நரேலாவுக்கு ரூ.43.02 கோடி, ஏபிஎம்சி நஜஃப்கருக்கு ரூ.4.42 கோடி, தில்லி வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியத்துக்கு ரூ.202.19 கோடியும் வழங்கப்படும்.

திக்ரிி காம்பூா் மொத்த விற்பனை மண்டி, பழங்கள் மற்றும் காய்கறிகள் மண்டி மற்றும் காஜிப்பூரில் உள்ள கோழிச் சந்தை ஆகியவற்றுடன், காஜிப்பூா் பூ சந்தையும் புதுப்பிக்கப்படும். மேலும், காஜிப்பூரில் உள்ள கோழிப்பண்ணை சந்தையின் சீரமைப்புப் பணிகள் ரூ.102.20 கோடியில் மேற்கொள்ளப்படும். ரூ.40.50 கோடி செலவில் காஜிப்பூரில் உள்ள பூ சந்தை மேம்படுத்தப்படும். இதனுடன், ஆசாத்பூா் மண்டியில் 7-ஆம் எண் கொட்டகையை சீரமைக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.