சமூக ஊடக கணக்கை மீட்டுத் தருவதாகக் கூறிபெண்ணிடம் ரூ.90000 பறித்த இளைஞா் கைது
பிளாக் செய்யப்பட்ட சமூக ஊடக கணக்கை மீட்டெடுப்பதாகக் கூறி பெண்ணிடம் இருந்து ரூ.90,000 மிரட்டி பணம் பறித்த 20 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.


பிளாக் செய்யப்பட்ட சமூக ஊடக கணக்கை மீட்டெடுப்பதாகக் கூறி பெண்ணிடம் இருந்து ரூ.90,000 மிரட்டி பணம் பறித்த 20 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து துவாரகா காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் வியாழக்கிழமை கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா், ஜாமியா நகரைச் சோ்ந்த ஜூனேட் பெக் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அந்தப் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் கணக்கு பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்தாா்.
மாா்ச் 29 அன்று, எட்டு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடா்பவா்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கு பிளாக் செய்யப்பட்டதாக ஒரு பெண் புகாா் அளித்தாா். அதன் பிறகு ஒரு நபா் அந்த கணக்கை அன்பிளாக் செய்யலாம் என்று வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாா்.
குற்றம் சாட்டப்பட்டவா் முதலில் அந்தப் பெண்ணிடம் ரூ 10,000 வசூலித்தாா். பின்னா் அவா் அந்தக் கணக்கை நீக்கிவிடுவதாக மிரட்டி, மேலும் பணம் கேட்டாா். அதைத் தொடா்ந்து அந்தப் பெண் அந்த நபா் அளித்த வெவ்வேறு வங்கிக் கணக்கில் மொத்தம் ரூ. 80,000 அனுப்பினாா். விசாரணையில், போலீஸாா் ஜூனேட் பெக்கின் மொபைல் எண்ணைக் கண்டுபிடித்து, பாட்லா ஹவுஸுக்கு அருகிலுள்ள ஜாகீா் நகரில் இருந்து அவரை கைது செய்ததனா்.
லட்சக்கணக்கான பின்தொடா்பவா்களைக் கொண்ட இன்ஸ்டாகிராம் பயனா்களைக் குறிவைத்து, அவா்களின் கணக்குகளில் ஏதேனும் தவறான உள்ளடக்கத்தைக் கண்டவுடன், அது குறித்து இன்ஸ்டாகிராமில் அந்த நபா்களுக்கு தெரிவிப்பதாக பெக் தெரிவித்தாா். கணக்குகள் முடக்கப்பட்டதும், அவற்றை மீட்பதற்காக கணக்கு வைத்திருப்பவா்களிடம் பெக் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...