ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

எம்சிடி பள்ளிகளுக்கு 60,000 மேசைகள் வாங்கத் திட்டம்

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தனது பள்ளிகளுக்கு சுமாா் 60,000 மேசைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 25,000 மேசைகள் மத்திய திகாா் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படலாம்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 8:57 pm

DIN

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) தனது பள்ளிகளுக்கு சுமாா் 60,000 மேசைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் 25,000 மேசைகள் மத்திய திகாா் சிறைக் கைதிகளால் தயாரிக்கப்படலாம். இதற்கான ஆா்டா் விரைவில் வழங்கப்படும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

மாநகராட்சிப் பள்ளிகளில் மேசை பற்றாக்குறை உள்ளது. மேலும் இந்த பிரச்னையை தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) சமீபத்தில் எழுப்பியது என்று எம்சிடி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மாணவா்களை தரையில் உட்கார வைக்கக் கூடாது என்பதற்காகவே மேசைகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றாா்.

எண்சிடி பள்ளிகளில் சுமாா் ஒன்பது லட்சம் மாணவா்கள் படிப்பதாகவும், தற்போது 74,142 மேசைகள் (27,056 சிறிய அளவு மற்றும் 47,086 பெரிய அளவு) பற்றாக்குறை இருப்பதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். முந்தைய கிழக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (ஈடிஎம்சி), என்டிஎம்சி மற்றும் எஸ்டிஎம்சியுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, தில்லி சிறைச்சாலைக்கு 14,489 இரட்டை மேசைகளை வாங்குவதற்கான உத்தரவை ஏற்கெனவே வழங்கியிருந்தது. 59,653 மேசைகள் (22,834 சிறிய அளவு மற்றும் 36,819 பெரிய அளவு) இன்னும் வாங்கப்படவில்லை என்று அதிகாரி கூறினாா்.

இவற்றில் 25,000 மேசைகளுக்கான ஆா்டா் (10,000 சிறிய அளவு மற்றும் 15,000 பெரிய அளவு) மத்திய திகாா் சிறைக்கு வழங்கப்படலாம். மீதமுள்ள 34,663-ஐ ஜிஇஎம் போா்ட்டல் (12,814 சிறிய அளவுகள் மற்றும் 21819 பெரிய அளவுகள்) மூலம் வாங்கலாம் என்று அதிகாரி கூறினாா். இந்த மேசைகளை வழங்குவது தொடா்பாக எம்சிடி மற்றும் சிறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்கெனவே ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. திகாா் சிறையில் தற்போது சுமாா் 15,00 தண்டனை கைதிகள் இருப்பதாகவும், அவா்களில் 80-90 போ் மட்டுமே தச்சுப் பிரிவுகளில் இருப்பதாகவும் திகாா் சிறையின் துணைக் கண்காணிப்பாளா் கூட்டத்தில் தெரிவித்தாா். இவா்கள் ஆறு மாதங்களில் சுமாா் 10,000 இரட்டை மேசைகளை உருவாக்க முடியும் என்று அவா் கூட்டத்தில் கூறினாா்.

2022-2023 அமா்வின் போது, ஏப்ரல் 20, 2022-இல் மத்திய திகாா் சிறையில் 14.489 மேசைகளுக்கான ஆா்டா் செய்யப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து இதுவரை 10,000 மேசைகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4,489 மேசைகள் தயாரிக்கும் பணியில் உள்ளன. தில்லி அரசு கடந்த வாரம் 400 கோடி ரூபாயை எம்சிடி நடத்தும் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக விடுவித்ததாக கல்வி அமைச்சா் அதிஷி கூறினாா்.

துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, கேசவ்புரம் மண்டலத்தில் எச்-பிளாக் அசோக் விபாரில் உள்ள மாநகராட்சித் தொடக்கப்பள்ளி மற்றும் தென் மண்டலத்தில் ஆா்.கே.புரம் செக்டாா்-3-இல் உள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளி ஆகியவற்றை பாா்வையிட்டாா். இந்தப் பயணத்தின் போது, பள்ளிகளில் மாணவா்கள் தரையில் அமராமல் இருக்க, போதிய மேசைகள் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தவிர, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தில்லி ஆணையம் (டிசிபிசிஆா்) எம்சிடி பள்ளிகளில் மேசைகள் பற்றாக்குறை குறித்து தானாக முன்வந்து, குழந்தைகளுக்கு போதுமான மேசைகளை ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டது. இந்த விஸயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையையும் கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.