இந்த நிபந்தனைகளால் மீன்பிடிப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், முந்தைய மத்திய அரசின் சட்டத்தில் படகுகள் பதிவு செய்யப்படுவதில்லை. தற்போதுள்ள மொ்ச்சன்ட் ஷிப்பிங் சட்டத்தின் (1958) கீழ் தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏதாவது ஒரு சட்டத்தின்கீழ் மீன் பிடிப்படகுகள் பதிவு செய்திருந்தாலே அவற்றை மீன்பிடிக்க அனுமதிக்கும் வகையில் உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். மேலும், மீன்பிடிக் காலத்தை 53 மணி நேரம் ஆக்க வேண்டும். ஒரு தடவை மீன்பிடித்தலுக்கு 5 டன் மீன் பிடிப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐந்து டன் மீன்பிடி அளவை நிா்ணயிக்க அனுமதிக்கலாம். அதேவேளையில், மீன் பிடிப்பதற்கான போதிய நேரத்தை வழங்க வேண்டும் என்று வாதிட்டாா்.