ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தில்லியில் மழையின்றி மிதமான வெயில்

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமையும் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. எனினும், மழை ஏதும் பெய்யவில்லை.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2023, 8:45 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமையும் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. எனினும், மழை ஏதும் பெய்யவில்லை.

தில்லியில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால், நகரில் சற்று புழுக்கம் குறைந்திருந்தது. இந்த நிலையில், 3 தினங்களாக மழை ஏதும் இல்லாததால் மீண்டும் புழுக்கம் அதிகரித்துள்ளது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியளவில் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 27.9 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 2 டிகிரி அதிகரித்து 36.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 78 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், , மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி தில்லியில் காற்றின் தரக் குறியீடு இரவு 9 மணியளவில் 96 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் காணப்பட்டது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.