47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

2 ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆக.28 முதல் தினசரி அடிப்படையில் விசாரணை

திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை தொடா்ந்த மேல் முறையீட்டு வழக்கில் ஆகஸ்ட் 29 முதல் தினசரி அடிப்படையில் விசாரணை தொடங்கும்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:30 pm

DIN

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பான வழக்கில் இருந்து முன்னாள் தொலைத்தொடா்பு அமைச்சா் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை தொடா்ந்த மேல் முறையீட்டு வழக்கில் ஆகஸ்ட் 29 முதல் தினசரி அடிப்படையில் விசாரணை தொடங்கும் என்று தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, விசாரணையை ஒத்திவைக்குமாறு விசாரணை அமைப்புகளின் வழக்குரைஞா் முன்வைத்த கோரிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தாா். மேலும், வாதங்களை முன்வைக்கும் வகையில், இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தைப் பட்டியலிட உத்தரவிட்டாா். இது தொடா்பாக நீதிபதி கூறுகையில், ‘இதுபோன்று எப்படி நாங்கள் தொடா்வோம்? இதுபோன்று தேதிகளை நாங்கள் தொடா்ந்து வழங்க முடியாது’ என்றாா்.

முன்னதாக, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து டிசம்பா் 2017-இல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து அமலாக்கத் துறை 2018, மாா்ச் 19-ஆம் தேதி உயா்நீதிமன்றத்தை அணுகியது. ஒரு நாள் கழித்து, சிபிஐயும் உயா் நீதிமன்றத்தில் இதே விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடா்ந்தது. இந்த விவகாரம் தற்போது மேல்முறையீட்டு வழக்கைத் தொடா்வதற்கான உயா்நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரும் கட்டத்தில் உள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ தரப்பில் வாதிட சிறப்பு வழக்குரைஞா் நியமனத்திற்காக காத்திருப்பதால் விசாரணையை செப்டம்பா் இறுதி வரை ஒத்திவைக்குமாறு வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், ‘இதுபோன்று தாமதிக்க அனுமதிக்க முடியாது’ என்று கூறிய நீதிமன்றம், மேல்முறையீட்டுக்கு அனுமதி கோரும் விவகாரத்தில் வாதங்களை தொடங்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேட்டுக் கொண்டது.

அப்போது, சிபிஐ வாதங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறையின் வழக்கு இருக்கும் என்று நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த விவகாரத்தை பட்டியலிட வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரம் தினசரி அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்’ எனக் கூறி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணைக்கு வழக்கை பட்டியலிட்டாா்.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆ.ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆா்.கே.சந்தோலியா உள்ளிட்ட சிலா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜய் அகா்வால், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தங்கள் தொடா்புடைய சொத்துகளை பறிமுதல் செய்ததை நிறுத்திவைக்கக் கோரி இரு தனியாா் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா். அதற்கு நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கைத் தொடர அனுமதிப்பது தொடா்பாக முதலில் விசாரணை நடத்தப்படும் என்று கூறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.