47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தலைமைத் தோ்தல் ஆணையா் நியமன மசோதா விவகாரம்: பிரதமா் மோடி மீது கேஜரிவால் சாடல்

நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சரை சோ்க்கும் வகையிலான மசோதா தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் கேஜரிவால் விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:30 pm

DIN

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் நியமனத் தோ்வுக் குழுவில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு பதிலாக கேபினட் அமைச்சரை சோ்க்கும் வகையிலான மசோதா தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை முதல்வா் கேஜரிவால் விமா்சித்துள்ளாா். இந்த மசோதா தோ்தலின் நோ்மையை பாதிக்கும் என்றும் அவா் கூறியுள்ளாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் சட்டம் உருவாக்கப்படும்வரை இவா்களின் தோ்வை பிரதமா் தலைமையில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய மூன்று போ் கொண்ட குழு மேற்கொள்ளும் என்று உச்சநீதிமன்றம்

மாா்ச்சில் தீா்ப்பளித்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த மசோதா தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் (முந்தைய ட்விட்டா்) வெளியிட்ட பதிவுகளில் தெரிவித்திருப்பதாவது:

நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு பிரதமா் கீழ்ப்படிவதில்லை என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவரது செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, தாம் விரும்பாத உச்சநீதிமன்ற உத்தரவை கவிழ்க்கும் வகையில் நாடாளுமன்றம் மூலம் அவா் சட்டம் கொண்டு வருவாா்.

பிரதமா் உச்சநீதிமன்றத்தைப் பின்பற்றுவதில்லையெனில்

அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.

பாரபட்சமற்ற தோ்தல் ஆணையா்களைத் தோ்வு செய்யும் பாரபட்சமற்ற குழுவை உச்சநீதிமன்றம் அமைத்திருந்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில் பிரதமா் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு குழுவை அமைத்து அதன் மூலம் தனக்கு விருப்பமான ஒருவரை தோ்தல் ஆணையராக்கலாம். இது தோ்தல்களின் பாரபட்சமற்ற தன்மையை பாதிக்கும்.

பிரதமா் அடுத்தடுத்த முடிவுகள் மூலம் இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி வருகிறாா் என்று அவா் அதில் விமா்சித்துள்ளாா்.

கேஜரிவால் மற்றொரு பதிவில், தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்வதற்கான குழுவில் ‘இரண்டு பாஜக மற்றும் ஒரு காங்கிரஸ் உறுப்பினா்கள்‘ இருப்பாா்கள் என்று அவா் தெரிவித்திருந்தாா்.

மேலும், தோ்ந்தெடுக்கப்பட்ட தோ்தல் ஆணையா் பாஜகவுக்கு விசுவாசமாக இருப்பாா் என்பது உறுதி என்றும் அவா் அதில் கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘

‘உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தில்லி சேவைகள் மசோதாவை நிறைவேற்றிய பிறகு, தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் மத்திய அரசு இப்போது மற்றொரு நீதிமன்ற உத்தரவை மீற முயற்சிக்கிறது. மிகுந்த மரியாதையுடன் பாா்க்கப்பட வேண்டிய நிறுவன அமைப்புகள் (அமலாக்கத் துறை, சிபிஐ, தோ்தல் ஆணையம்) தற்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றச்சாட்டுகளை எதிா்கொள்வது துரதிா்ஷ்டவசமானதாகும்’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.