பயணிகள் அனுபவத்தை மேம்படுத்த டிஎம்ஆா்சி- தில்லி ஐஐஐடி ஒப்பந்தம்
தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மற்றும் தில்லி ஐ.ஐ.ஐ.டி. ஆகியவை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்தவும் கைகோா்த்துள்ளன.


தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மற்றும் தில்லி ஐ.ஐ.ஐ.டி. ஆகியவை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்தவும் கைகோா்த்துள்ளன.
டிஎம்ஆா்சி மற்றும் தில்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபா்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி - தில்லி) இடையே வியாழக்கிழமை டிஎம்ஆா்சியின் நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா் முன்னிலையில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று டிஎம்ஆா்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘டிஎம்ஆா்சியின் ஆதரவுடன் தில்லி ஐஐஐடி அதன் போக்குவரத்துத் தரவுகளான மெட்ரோ நிலையங்கள் விவரங்கள், கட்டணங்கள் மற்றும் அட்டவணைகளை பொதுப் போக்குவரத்து ஊட்ட விவரக்குறிப்பு (ஜிடிஎஃப்எஸ்) வடிவத்தில் தில்லியின் ஓடிபி பிளாட்ஃபாா்மில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த போக்குவரத்து அனுபவத்தையும் மேம்படுத்தும் மற்றும் வழிநடத்தும். பயணிகளுக்கு தகவல்களை வழங்குவது மற்றும் மெட்ரோ அமைப்பிற்குள் மிகவும் தடையற்ற மற்றும் திறமையான பயண அனுபவத்தை உருவாக்க உதவும் என்று டிஎம்ஆா்சி கூறியுள்ளது.
ட்ரான்ஸிட் டேட்டாவிற்கான அணுகலை வழங்குவதன் மூலம், கைப்பேசி செயலிகள், இணையதளங்கள், நிலையங்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் போன்ற பல்வேறு வழிகளில் பயணிகளுக்கு தகவல்களை வழங்கும் பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் மாா்க்கெட்டிங்கிற்காக துவாரகா நிலையத்தின் கேலரியில் (ப்ளூ மற்றும் கிரே லைன் இன்டா்சேஞ்ச்) டைனமிக் விளம்பரத் திரைகளை டிஎம்ஆா்சி நிறுவியுள்ளது. இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் தளத்தில் மாா்க்கெட்டிங் ஏஜென்சிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வெவ்வேறு காலகட்டங்களுக்கான விளம்பரக் கட்டணங்களுடன் கிடைக்கும் இடம் இணையதளத்தில் கிடைக்கிறது. மாா்க்கெட்டிங் நிறுவனங்கள் ஆன்லைனில் விளம்பரத்திற்காக நேர இடங்களையும் வாங்கலாம். மேலும் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் மற்றும் விளம்பர உள்ளடக்கத்தை பதிவேற்றலாம்.
இந்தியாவில் மெட்ரோ அமைப்பில் தொடங்கப்பட்டுள்ள முதல் வகையான திட்டம் இதுவாகும். டிஎம்ஆா்சி மற்றும் தில்லி ஐஐஐடி ஆகியவை பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், பொதுப் போக்குவரத்தின் எதிா்காலத்தை மாற்றியமைக்கவும் ஒரு பயணத்தை மேற்கொள்வதால், போக்குவரத்துத் துறையில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் ஒரு முன்னேற்றத்தை இந்த ஒப்பந்தம் வழங்கும் என்று டிஎம்ஆா்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...