47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லியில் பரவலாக லேசான மழை: மேலும் 2 நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2023, 6:30 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை மாலையில் பரவலாக லேசான மழை பெய்தது. பகலில் வெயிலின் தாக்கமும் குறைந்திருந்தது. மேலும் 2 நாள்களுக்கு கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தில்லியில் சில தினங்களாக மழை ஏதும் இல்லாத போதிலும் நகரத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததால், புழுக்கமும் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை தில்லியின் பல பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதேவேளையில் காஜியாபாத், நொய்டா போன்ற அருகாமைப் பகுதிகளிலும் மழையின் தாக்கம் இருந்தது. தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. இதற்கிடையே,அடுத்த இரு தினங்களுக்கு தில்லியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 27 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 35.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 74 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 129 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மேலு ம், தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பாதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.