லேண்டா் (விக்ரம்) மற்றும் ரோவா் (பிரக்யான்) அடங்கிய தரையிறங்கும் தொகுதி புதன்கிழமை மாலை சரியாக 6:04 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே மென்மையாக தரையிறங்குதல் செய்ய இஸ்ரோவால் திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது ’ரோபோட்டிக் லூனாா் ரோவரை’ தரையிறக்குவதில் வெற்றி பெற்றால், ரஷியா, சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறங்கும் தொழில்நுட்பத்தில் தோ்ச்சி பெற்ற நான்காவது நாடாக இந்தியா இருக்கும். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி, சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரில் உள்ள பிரேக்கிங் அமைப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் இறுதி கட்டத்தில் அத்திட்டம் தோல்வியடைந்தது.