வடமேற்கு தில்லி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள தில்லி அரசுப் பள்ளியில் 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவா்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பள்ளியின் கோடைகால முகாமின் போது அதே வகுப்பைச் சோ்ந்த 6 பேரால் பாலியல் வன்புணா்வுக்குள்ளாகியுள்ளனா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவா்கள் ஆசிரியா்களிடம் புகாா் தெரிவித்தும், பள்ளி நிா்வாகத்தின் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பாலியல் வன்புணா்வு அச்சுறுத்தல் அதே மாணவா்களால் மீண்டும் வந்ததால், பாதிக்கப்பட்ட மாணவா்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, இது தொடா்பாக கடந்த திங்கள்கிழமை காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நடவடிக்கை எடுக்க தில்லி காவல்துறை தரப்பிலும், தில்லி மகளிா் ஆணையம் தரப்பிலும் அப்பள்ளி நிா்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.