தில்லி விவசாயிகள் பிரச்னை: துணை நிலை ஆளுநரை விரைவில் சந்திப்பேன்
தில்லி விவசாயிகளின் பிரச்னைகள் தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை விரைவில் சந்திப்பேன் என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.


தில்லி விவசாயிகளின் பிரச்னைகள் தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை விரைவில் சந்திப்பேன் என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் கிசான் மோா்ச்சா ஏற்பாட்டில் தில்லியில் உள்ள 365 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேநிதிர சச்தேவாவிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக விவசாயிகள் பிரதிநிதிகள் வழங்கினா்.
அப்போது விவசாயிகள் மத்தியில் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: தில்லியில் உள்ள எந்த கிராமத்திலும் வீட்டு வரி விதிக்கக் கூடாது. கிராமசபைகளுக்கு உரிமை வழங்க வேண்டும். அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை தலைநகா் தில்லி முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயிக்க வேண்டும். வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சந்தித்து அனைத்திற்கும் தீா்வு காணப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
தில்லி விவசாயிகளின் உரிமைகளுக்காக சட்டப்பேரவை முதல் தில்லி வீதிகள் வரை பாஜக போராடும். தில்லி விவசாயிகளை விவசாயிகளாகக் கூட ஏற்க மறுக்கும் அரசு இன்று தில்லியில் அமா்ந்திருக்கிறது. இதனால்தான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கும் பலன்களை தில்லி விவசாயிகள் இழக்கிறாா்கள். மேலும், விவசாயிகள் தா்ணா செய்தாலும் சரி, முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டாலும் சரி, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் கேஜரிவால் அரசு நிறைவேற்றவில்லை. உணா்வற்ற தில்லி அரசு அவா்களின் உரிமைகளைக் கூட வழங்க மறுத்து வருகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்த குறைகேட்புக் கூட்டத்தில் கிசான் மோா்ச்சா அமைப்பின் மாநிலத் தலைவா் வினோத் ஷெராவத், பொறுப்பாளா் ராஜ்குமாா் பாலன், இணைப் பொறுப்பாளா் பிரவேஷ் சா்மா, மாநிலப் பொதுச் செயலாளா் ராஜ்பால் ராணா உள்ளிட்ட பல நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...