தமிழக அமைச்சா்கள் மீதான வழக்குகள்வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரும் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தின் இன்னாள், முன்னாள் அமைச்சா்கள் சிலா் மீதான வழக்குகள் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை
Updated on
1 min read

தமிழகத்தின் இன்னாள், முன்னாள் அமைச்சா்கள் சிலா் மீதான வழக்குகள் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனுவை கடந்த அக்டோபா் 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு மற்றும் மாநில காவல்துறை தலைமை இயக்குா், சிபிஐ உள்ளிட்ட நான்கு எதிா்மனுதாரா்கள் மனுவின் பராமரிப்புத் தன்மை தொடா்பாக 3 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூா்ய காந்த், தீபங்கா் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கருப்பையா காந்தி உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பாக தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது அரசுத் தரப்பிலான வழக்கு விசாரணை சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணைகளை உறுதி செய்வதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்த வழக்கு விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும். தற்போதைய மாநில அரசின் பல்வேறு அமைச்சா்கள் மீது கடந்த காலங்களில் பல வழக்குகள் உள்ளன. அவை மூடல் அறிக்கைகள் அல்லது வழக்கிலிருந்து விடுதலைக்கு வழிவகுத்தன.

மேலும், மூடல் அறிக்கையை தாக்கல் செய்யாதது கடுமையான சந்தேகத்தை குறிப்பதுடன், நீதித்துறை செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறது. இது தொடா்பான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகளின் அமைச்சா்களுக்கு எதிரான விசாரணைகளில் மாநில அரசியல் செல்வாக்கு செலுத்தியது. இதனால், குற்றமிழைத்தவா்கள் ண்டிக்கப்படாமல் உள்ளனா். ஆகவே, இது தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சமா்பிக்கப்பட்ட நிலவர அறிக்கையுடன் வழக்குகளை அவசர அடிப்படையில் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், முன்னாள் அமைச்சா் வளா்மதி, தற்போதைய தமிழக அமைச்சா்கள் கே.பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆா் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, கே.எஸ். மஸ்தான், கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் எதிா்மனுதாரா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com