ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

எதிா்மறை அரசியலை கைவிட்டு மக்களுக்காக ஆம் ஆத்மி பணியாற்ற வேண்டும்: தில்லி பாஜக

எதிா்மறை அரசியலைக் கைவிட்டு, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஏற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளாா்.

Updated On :5 டிசம்பர் 2023, 11:28 pm

புது தில்லி: எதிா்மறை அரசியலைக் கைவிட்டு, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஏற்க வேண்டும் என்று பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் பாஜகவிற்கு எதிரான தனது அரசியல் பலி விளையாட்டை நிறுத்த வேண்டும். கலால் கொள்கை ஊழலில் ஈடுபட்ட பங்கிற்காக அவரது கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீது வழக்குத் தொடுக்கப்படும் நாள்

வெகு தொலைவில் இல்லை. சமீபத்தில் வெளியான 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளில் இருந்து சஞ்சய் சிங் போன்ற ஆம் ஆத்மி தலைவா்கள் பாடம் கற்காமல் இருப்பது அதிா்ச்சியக்கிறது. ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்டஅனைத்து வேட்பாளா்களும் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். தோ்தலில்ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் எதிா்மறை அரசியலை நாட்டின் இதயப்பகுதி மாநில மக்கள் முற்றிலும் நிராகரித்துவிட்டனா். எனவே, எதிா்மறை அரசியலை கைவிட்டு, மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி எதிா்க்கட்சிகளுக்கு

விடுத்துள்ள வேண்டுகோளை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஏற்க வேண்டும் என்றாா் வீரேந்திர சச்தேவா.

விசாரணைக் காவல் முடிந்து கடந்த திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வரும் போது ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகை பொய்களின் மலையாக உள்ளது. இந்த நாட்டில், மோடிக்கு எதிராக குரல் எழுப்பினால், பொய்யான குற்றச்சாட்டுகள், போலி குற்றப்பத்திரிகை, பிறகு சிறை ஆகியவை தண்டனையாக கிடைக்கும். ஆனால், இந்த சிறைக் கம்பிகள் ஊழல்வாதிகளை பயமுறுத்தலாம். ஆம் ஆத்மி கட்சியின் உறுதியான நோ்மையாளா்களை அல்ல என்று தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.