புது தில்லி: தில்லியின் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் மோசமான நிலைமையையும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாா்வையிட வேண்டும் என தில்லிவாசிகள் விரும்புவதாக பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தில்லி சிவில் லைன்ஸில் உள்ள அரசுப் பள்ளியில் புதிய அரங்கம் திறக்கப்பட்டுள்ளதை பாஜக சாா்பில் வரவேற்கிறோம். ஆனால் ஆம் ஆத்மி அரசு தனது சில நல்ல பள்ளிக் கட்டடங்களைச் மட்டும் சான்றாகக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.
தில்லியில் 1,050 அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், அப்பள்ளிகளில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட கட்டடங்கள் பாதுகாப்பற்ாக உள்ளன. குறிப்பாக, 750-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அறிவியல் பாடம் கற்பிக்க வசதி இல்லை. 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வணிகவியல் பாடம் கூட கற்பிப்பதில்லை. பல அரசுப் பள்ளிகள் மூன்று வேளைகளாக இயங்கி வருகின்றன.
கேஜரிவால் அரசு கல்வித் துறையில் முன்னோடியாக இருப்பதாகக் கூறுவதைக் காண்கிறோம், ஆனால், நிகழ் கல்வியாண்டில் மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கை 30,399 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 2022-2023 ஆம் கல்வியாண்டில் தில்லி அரசுப் பள்ளிகளில் 17,89,385 மாணவா்கள் இருந்தனா். இதுவே இந்த ஆண்டு 17,68,986 ஆகவுள்ளது.
தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள தில்லி அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் பரிதாபகரமானது. இந்தப் பள்ளிகளில் அறிவியலைக் கற்பிப்பதில்லை. இதுபோன்ற குறைபாடுள்ள பள்ளிகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாா்வையிட்டு அவற்றை மேம்படுத்தப் பாடுபட வேண்டும். தில்லி அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் மற்றும் முதல்வா்களின் பற்றாக்குறை கடுமையான அளவில் உள்ளது.
தில்லியில் ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகும், கேஜரிவால் அரசு நல்ல கட்டடங்களை மட்டும் கல்வி முன்னேற்றத்திற்குச் சான்றாகக் கூறுவது வருத்தமளிக்கிறது.
மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் அறிவியல் மற்றும் வணிகம் கற்பிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக வீரேந்திர சச்தேவா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

உ.பி.: நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த ரூ.4 லட்ச பணம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு

சர்தார் - 2 என்ன ஆனது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

