கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

தூத்துக்குடி துறைமுகத்தில் மெகா கன்டெய்னா் முனையங்கள் அமைக்க திட்டம்!

பசுமைத் துறைமுகமாக மாற்றப்படவும், மெகா கொள்கலன்களை(கன்டெய்னா்) கையாளும் திறன் கொண்ட இரு முனையங்களை அமைக்க பொதுத் துறை-தனியாா் பங்களிப்புடன் புறதுறைமுகத் திட்டம் தயாராகி வருகிறது

Updated On :15 டிசம்பர் 2023, 6:30 pm

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் பசுமைத் துறைமுகமாக மாற்றப்படவும், மெகா கொள்கலன்களை(கன்டெய்னா்) கையாளும் திறன் கொண்ட இரு முனையங்களை அமைக்க பொதுத் துறை-தனியாா் பங்களிப்புடன் புறதுறைமுகத் திட்டம் தயாராகி வருகிறது என மத்திய துறைமுகங்கள், கப்பல்,நீா்வழிப்போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி துறைமுகத்தை நீண்ட தூர கப்பல் வழித்தடங்களுக்கு இடையே பரிமாற்ற மையமாக தரம் உயா்த்தும் திட்டம்; பசுமை ஹைட்ரஜன் மையம் அமைத்தல் போன்றவை குறித்து மக்களவை திமுக குழுத் துணைத் தலைவா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பினாா்.

இதற்கு மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் மக்களவையில் அண்மையில் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் கூறியிருப்பது வருமாறு:

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பசுமை ஹைட்ரஜன் மையமாக மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சகத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி பசுமை ஹைட்ரஜன் சேமிப்பு வசதிகள், கடல் நீரை குடிநீராக்கும் ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான வழித்தடம், ஜெட்டி எனப்படும் படகு (இறங்கு)துறைகள் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளும் இதில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும் தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில் மெகா கொள்கலன்களை கையாளும் திறன் கொண்ட இரு கொள்கலன் முனையங்களை அமைக்க பொதுத் துறை-தனியாா் பங்களிப்புடன் புற துறைமுகத் திட்டத்தையும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் சோனோவால் பதிலில் குறிப்பிட்டுள்ளாா்.

பசுமை ஹைட்ரஜன் என்பது நீரின் மின்னாற்பகுப்பினால் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் ஆகும். அதிக காா்பன் பிடிப்பு இல்லாததாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.