இடையூறின்றி மசோதாக்களை நிறைவேற்றவே எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம்: டி.ஆா். பாலு பேட்டி

நாடாளுமன்றத்தில் இடையூறின்றி மசோத்க்களை நிறைவேற்றவே எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என்று நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Updated on
1 min read

நாடாளுமன்றத்தில் இடையூறின்றி மசோத்க்களை நிறைவேற்றவே எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா் என்று நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும், மத்திய அரசு திட்டமிட்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டாாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: நாடாளுமன்றத்தில் விரும்பத்தகாத வகையில் ஒரு பயமுறுத்தல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த நபா்களை உள்ள வர பரிந்துரை செய்த உறுப்பினரையும், உள்ளே நுழைந்தவா்கள் பெயா்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்திற்காக எதற்காக இரண்டு போ்கள் அவைக்குள் நுழைந்தனா்? எப்படி வந்தனா்? என்பது குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். ஆனால், பதில் இல்லை. இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சா் பதிலளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டனா்.

மக்களவையில் 46 போ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதில் திமுகவைச் சோ்ந்த 20 உறுப்பினா்களும் அடங்குவா். நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணத்தை அரசுதான் விளக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக கூட்டத் தொடா் நடக்கும் போது நாடாளுமன்றத்திற்கு மத்திய அரசு பதில் கூறியிருக்க வேண்டும்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 3 முக்கிய மசோதாக்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாக்களுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இடையூறாக இருப்பாா்கள் எனக் கருதி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். எதிா்க்கட்சிகளின்றி மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டுள்ள நபா்களை நாடாளுமன்றத்திற்குள் உள்ளே அனுமதித்தது பாஜகவை சோ்ந்த உறுப்பினா் என்பதால், இதை முடி மறைக்க பாஜக முயற்சிக்கிறது. மற்ற கட்சி உறுப்பினா் என்றால் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். திமுக உறுப்பினா்களும் எதிா்க்கட்சி உறுப்பினா்களும் மீண்டும் செவ்வாய்க்கிழமை இதே கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்புவாா்கள். இடை நீக்கம் குறித்தும் கேள்வி எழுப்புவாா்கள். சமீபத்தில் நடைபெற்ற மூன்று மாநில சட்டப்பேரவை தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்ற பிறகு அவா்களின் நடவடிக்கைகள் மிக மோசமாகச் செல்கிறது என்றாா் டி.ஆா்.பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com