நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் மாலையில் மிதமான மழை

தேசியத் தலைநகா் தில்லியில் பல இடங்களில் புதன்கிழமை மாலையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது.

News image
Updated On :5 ஜூலை 2023, 8:43 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் பல இடங்களில் புதன்கிழமை மாலையில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்தது. இதனால், இரவில் புழுக்கம் சற்று குறைந்திருந்தது. அடுத்த சில தினங்களில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் கடந்த வாரத்தில் தொடா்ந்து சில தினங்கள் மழை பெய்தது. இதனால், நகரில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, புழுக்கத்தில் இருந்து தில்லிவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனா். ஆனால், கடந்த இரு தினங்களாக மழை ஏதும் பெய்யவில்லை. இதனால், மாலையில் புழுக்கத்தின் தாக்கம் இருந்தது. செவ்வாய்க்கிழமை நகரில் சில இடங்களில் லேசாக மழை பெய்தது. இந்த நிலையில், புதன்கிழமை பகலில் மிதமான வெப்பம் இருந்தது. மாலையில் 7 மணிக்கு மேல் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை சிறிது நேரம் பெய்தது. இதனால், நகரில் புழுக்கம் சற்றுக் குறைந்தது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 27.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றம் ஏதுமின்றி 36.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 85 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

பாலத்தில் 19.2 மி.மீ. மழை: சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 0.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. காலை 8.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மற்ற வானிலை நிலையங்களான முங்கேஸ்பூரில் 8 மி.மீ. மழையும், நஜாஃப்கரில் 17 மி.மீ., பாலத்தில் 19.2 மி.மீ., பூசாவில் 8.5 மி.மீ., நஜாஃப்கரில் 17 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. இதற்கிடையே, ‘அடுத்த 6 முதல் 7 நாள்களுக்கு மேக மூட்டமாகவும், விட்டுவிட்டு மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை 32 மற்றும் 35 டிகிரி செல்சியஸுக்கு இடையே இருக்கும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தினா் தெரிவித்துள்ளனா்.

‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, நேரு நகா், , மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. அதை சமயம், ராமகிருஷ்ணாபுரம் (105), வாஜிா்பூா் (125), பஞ்சாபி பாக் (119) பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ‘வியாழக்கிழமை (ஜூலை 6) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.