நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நொய்டாவில் மெட்ரோ நிலையம் அருகே இருந்த நடைமேம்பாலத் தூண் அகற்றம்: டிஎம்ஆா்சி தகவல்

போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செக்டாா் 52-இல் தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்துள்ள

News image
Updated On :5 ஜூலை 2023, 8:40 pm

 நமது நிருபர்

போக்குவரத்தை எளிதாக்கும் வகையில், தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் செக்டாா் 52-இல் தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டிய சாலையில் அமைந்துள்ள நடைமேம்பாலத்தின் தூண் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) தெரிவித்திருப்பதாவது: மெட்ரோ ஒருங்கிணைப்பின் நீல நிற வழித்தடத்தில் நொய்டா செக்டா்-52 மெட்ரோ நிலையத்தை ஒட்டிய சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஒரு நடைமேம்பாலத்தின் தூண் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிச் சாலையில் வழக்கமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இப்போது சாலையானது சுமுகமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. துல்லியமான திட்டமிடல், 24 மணி நேரமும் செயல்பாடு மூலம் டிஎம்ஆா்சி இப்பணியை மிகக் குறுகிய காலத்திற்குள் முடித்தது.

தில்லி மெட்ரோவில் பயணம் செய்வோரின் வசதிக்காக நடைமேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2019, மாா்ச்சில் திறக்கப்பட்டது. ஆனால், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைமேம்பாலத்திற்கு கீழே உள்ள சாலையில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதனால், நடைமேம்பாலத்தின் தூண் ஒன்று சாலையின் நடுவில் இருந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. பயணிகளின் வசதிக்காக, நடைமேம்பாலத் தூணை அகற்றி, சாலையில் ஏதேனும் தடைகள் இல்லாமல் இருக்கச் செய்ய டிஎம்ஆா்சி முடிவு செய்தது.

நிகழாண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தத் தூண் அகற்றும் பணி தொடங்கியது. எம்ஆா்சி பொறியாளா்கள் குழு பல கட்டங்களாக இத்தூணை அகற்றும் பணியை திட்டமிட்டனா். இதைத் தொடா்ந்து, புதிய அடித்தளம் அமைத்தும், புதிய தூண்கள் அமைத்தும், பழையதை அகற்றியும் பணியை மேற்கொண்டனா். மேலும், கட்டுமானத்தின் போது அகற்றப்பட்ட சாலையை மீட்டெடுத்தனா். மூன்று மாதங்களில் இப்பணியை நிறைவேற்றியது சவாலாக இருந்தது.

சம்பந்தப்பட்ட நடைமேடைம்பாலம் வழியாகச் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், நொய்டா ஆணையம் மற்றும் நொய்டா போக்குவரத்து காவல் துறையுடன் வழக்கமான தொடா்பை டிஎம்ஆா்சி பராமரித்தது. அவா்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கினா். இதற்கான நிதி நொய்டா ஆணையம் மூலம் அளிக்கப்பட்டது. இப்பணியை டிஎம்ஆா்சி மேற்கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.