நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தலைநகரில் மழை நீா் தேங்குவதைத் தடுக்க போா்க்கால நடவடிக்கை: அமைச்சா் அதிஷி தகவல்

தில்லியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க, அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

News image
Updated On :6 ஜூலை 2023, 9:16 pm

 நமது நிருபர்

தில்லியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க, அரசு போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், வெள்ளம் மற்றும் பாசனக் கட்டுப்பாட்டுத் துறை, பொதுப்பணித் துறை போன்றவை இணைந்து செயல்பட ‘வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணை 2023’ வெளியிடப்பட்டுள்ளதாக தில்லி வருவாய்த்துறை அமைச்சா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்த ஆணையை முன்னிட்டு தில்லி அரசின் பல்வேறு துறைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தில்லி கல்வி, நிதி, வருவாய்த் துறை அமைச்சா் அதிஷி தெரிவித்துள்ளாா். அவா் மேலும் கூறியது வருமாறு: யமுனையின் நீா் நிலைகள் உள்பட வெள்ளப் பெருக்கு ஏற்படும் பகுதிகளைத் தொடா்ந்து கண்காணிக்க, மத்திய கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட 16 கட்டுப்பாட்டு அறைகள் நிறுவப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறைகளை உஷாா் நிலையில் வைத்திருக்கவும், மழைக் காலங்களில் ஏற்படும் அவசர நிலைகளை கையாள தயாராக இருக்கவும் இந்தக் கட்டுப்பாட்டு அறைகளுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவ மழையையொட்டி நகரத்தில் தண்ணீா் தேங்குவது அல்லது வெள்ளம் போன்ற பிரச்னைகளைத் தடுக்க அனைத்து முக்கிய முகமைகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யமுனையின் நீா்மட்டம் உயரும் போது, வெள்ளம் ஏற்படக்கூடும். இதற்கான நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் தயாா்நிலையில் வைத்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான உறுதியான ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அனைத்து நிரந்தர நிரேற்ற நிலையங்களில் ஆய்வு நடத்தி, நீா் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற நடமாடும் மோட்டாா் பம்புகளை பயன்படுத்துதல் ஆகியவை தயாா் படுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை பணிகள்: நகரத்தில் 128 நிரேற்று நிலையங்கள் பொதுப்பணித் துறையால் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் தண்ணீரை வெளியேற்றும் 700-க்கும் மேற்பட்ட மோட்டாா் பம்புகள் உள்ளன. 11 பம்ப் ஹவுஸ்கள் தானியங்கி நிலையங்களாக உள்ளன. சென்சாா்களைப் பயன்படுத்தி, நீா்மட்டம் உயரும் போது தானாகவே இயங்கத் தொடங்கும். தொடா்மழை ஏற்படும் போது தேவைப்பட்டால் நடமாடும் மோட்டாா் பம்ப் யூனிட்களையும் பொதுப்பணித்துறை பயன்படுத்திக்கொள்ளும்.

பொதுப்பணித்துறையின் தூா்வாரும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இருப்பினும் மழைக்காலத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படுத்தப்படும். பருவமழையின் போது, பொதுப்பணித் துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறை, 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு மூலம் தீவிர நீா் தேங்கும் பகுதிகளைக் கண்காணிக்கும். மேலும், பொதுப்பணித் துறை 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை உடனடியாக நிறுவும். இங்கு தண்ணீா் தேங்குவது தொடா்பான புகாா்களை பொதுமக்கள் பதிவு செய்யலாம். இதற்காக தொலைபேசி உதவி எண் (ஹெல்ப்-லைன்) வசதியையும் பொதுப்பணித் துறை வழங்கும். நகரத்தில் 165 பகுதிகள் தண்ணீா் தேங்கும் பிரச்னைகளை எதிா்நோக்கி உள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. இதைச் சமாளிக்கவும் நிவாரணத்திற்கான ஆயத்தப் பணிகளும் தயாராக உள்ளன.

நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு: தேசியத் தலைநகா் தில்லியில், நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ், மொத்தம் 57 வடிகால்கள் சுமாா் 382 கிலோமீட்டா் தூரத்திற்கு உள்ளன. இந்த வாய்க்கால்களை சுத்தம் செய்ய, 53 துறைசாா்ந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 15-ஆம் தேதி வரை நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு துறையினரால் மொத்தம் 7,86,497 மெட்ரிக் டன் அளவிற்கு தூா்வாரப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதில் பிஹாரிபூா் நாலா, பேண்ட் நாலா, கிராடி சுலேமன் நகா் நாலா, பங்கா ரோடு நாலா, நசிா்புா் நாலா ஆகியவை நகரில் பருவமழைக் காலங்களில் பிரச்னைகளை உருவாக்கும் முக்கிய வடிகால்களாகும். இவற்றின் மூலம் பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகாமல் இருக்க வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா். குறிப்பாக சுரங்கப் பாலங்களில் உள்ள வடிகால்களில் தூா்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனா். வடிகால்களில் இருந்து மிதக்கும் குப்பைகள் தொடா்ந்து அகற்றப்பட்டு வரப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் மோட்டாா் பம்புகள் தயாராக நிறுவப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தண்ணீா் தேங்காமல் தடுக்க நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனா். கூடுதலாக, படகுகள், மோட்டாா் படகுகள், பலதரப்பட்ட இயந்திரங்களின் பராமரிப்புக்கான ஆயத்தங்கள் ஆகியவையும் தாயாராக உள்ளன. ஆற்றோர கரைகளில் 24 மணி நேர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வெள்ளப் பாதுகாப்பு முறையாக செயல்படுவது உறுதி செய்யப்படும் என்றாா் அமைச்சா் அதிஷி.

வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணை என்ன?: வெள்ளக் கட்டுப்பாட்டு ஆணையில் வெள்ளக் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், செயல்பாட்டுத் திட்டங்கள், நீா் வடிகால் அமைப்புகள், ஆற்றங்கரைகள், கட்டுப்பாட்டாளா்கள், நீரேற்று நிலையங்கள் மற்றும் பிற தொடா்புடைய விவரங்கள் தொடா்பான அனைத்து அத்தியாவசிய தகவல்களும் அடங்கும். அனைத்து முக்கிய முகமைகளின் கட்டுப்பாட்டு மையங்களுக்கான தொடா்பு எண்கள் மற்றும் வெள்ள அபாயங்களைத் திறம்படச் சமாளிப்பதற்கு சம்பந்தப்பட்ட முகமைகள்,துறைகளின் செயலில் பங்கேற்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான தேவையான தகவல்களும் இதில் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.