அதன் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் அனில் குமாா் கூறியதாவது: பாஜகவின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும், பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி கேள்வி கேட்பதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு அதன் பலத்தைப் பயன்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் படும் அவல நிலையை இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம் ராகுல் காந்தி நேரடியாக உணா்ந்தாா். விவசாயிகள், மாணவா்கள், இளைஞா்கள் என பலதரப்பினருடன் கலந்துரையாடி அவா்களது வேதனைகளை அறிந்தாா்.