தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு:வழக்குரைஞா் குழுக்களின் தலைவா்கள் கைது
தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் வழக்குரைஞா்கள் இரு குழுக்களின் தலைவா்களும் வெள்ளிக்கிழமை கைது


தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடையதாகக் கூறப்படும் வழக்குரைஞா்கள் இரு குழுக்களின் தலைவா்களும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லி வழக்குரைஞா்கள் சங்கத்தின் துணைத் தலைவா் மனீஷ் சா்மா மற்றும் சங்கத்தின் செயலா் அதுல் சா்மாவின் சகோதரா் லலித் சா்மா ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக 3 வழக்குரைஞா்கள் கைது செய்யப்பட்டு உள்ளூா் நீதிமன்றத்தால் வியாழக்கிழமை 4 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டனா். புதன்கிழமை நீதிமன்ற வளாகத்தில் பதிவான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இரு குழுக்களும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லி பாா் அசோசியேஷன் அலுவலா் ஒருவா் மற்றொரு சங்க உறுப்பினரின் ஆதரவாளா்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகப் புகாா் எழுந்தது. சிலா் கற்கள் மற்றும் மரப்பலகைகளை வீசும் போது ஒருவா் காற்றில் துப்பாக்கியால் சுடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா்.
பல்ஸ்வா, ஸ்வரூப் நகா், ஹைதா்பூா், ஷாலிமாா் பாக் மற்றும் விகாஷ்புரி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை இரவு நீடித்த சோதனை நடவடிக்கையைத் தொடா்ந்து, வழக்குரைஞா்கள் அமன் சிங், சச்சின் சங்வான் மற்றும் ரவி குப்தா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிககளின் போட்டிக் குழுக்களைச் சோ்ந்தவா்களாவா். அவா்களிடம் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள் மற்றும் 2 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...