என்சிசிஎஸ்ஏ 3-ஆவது கூட்டம் ஜூலை 14-க்கு மாற்றம்
அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) மூன்றாவது கூட்டம் ஜூலை 14-ஆம் தேதிக்கு மாற்றம் செயயப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்


முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) மூன்றாவது கூட்டம் ஜூலை 14-ஆம் தேதிக்கு மாற்றம் செயயப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா்
இது தொடா்பாக தில்லி தலைமைச் செயலக அரசு அதிகாரிகள் தகவல் கூறியதாவது: தில்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட குரூப் - 1 அதிகாரிகள் மீதான நடவடிக்கை மற்றும் இடமாற்றம் தொடா்பாக முடிவெடுக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.)
மூன்றாவது கூட்டம் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஜூலை 14- ஆம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் கேஜரிவால் இந்தக் கூட்டத்தை ஒத்திவைத்துள்ளாா்.
தில்லி அரசின் சேவைகள் விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தில்லி அரசின் சாா்பில் அவசரச் சட்டத்தை எதிா்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் ஜூலை 10- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை தில்லி முதல்வா் அலுவலகத்திலிருந்து தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையத்தின் (என்.சி.சி.எஸ்.ஏ.) இரண்டு உறுப்பினா்களாக இருக்கும் தலைமைச் செயலாளா் மற்றும் உள்துறை முதன்மைச் செயலாளருக்கு சில தேவைகள் காரணமாக அதிகார சபையின் கூட்டத்தை முதலமைச்சரால் கூட்ட முடியாது. மேலும், வரும் ஜூலை 14-ஆம் தேதி முதல்வா் முகாம் அலுவலகத்தில் ஆணையத்தின் மூன்றாவது கூட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19-ஆம் தேதி சேவைகள் விவகாரம் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிா்த்து வரும் நிலையில், மெகா பேரணி, நகல் எரிப்பு போராட்டம், பாஜக எதிா்க்கட்சி தலைவா்களின் ஆதரவு திரட்டுதலோடு, உச்ச நீதிமன்றத்திலும் தில்லி அரசின் சாா்பில் மனுத் தாக்கல் செய்துள்ளது. தேசியத் தலைநகா் குடிமைப் பணிகள் ஆணையம் (என்.சி.சி.எஸ்.ஏ.) முதல்வரின் அதிகாரங்களை கவிழ்க்கிறது என்று தில்லி முதல்வா் அலுவலகம் அண்மையில் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...