மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லி கலால் ஊழல் வழக்கு: தினேஷ் அரோராவை4 நாள்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி

தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோராவை பணமோசடி வழக்கில் நான்கு நாள்கள் அமலாக்கத்துறை அனுமதி

News image
Updated On :7 ஜூலை 2023, 4:33 pm

 நமது நிருபர்

தில்லி கலால் ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபா் தினேஷ் அரோராவை பணமோசடி வழக்கில் நான்கு நாள்கள் அமலாக்கத் துறை விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

அரோராவை ஏழு நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் பெரும் சதியை வெளிக்கொணர அவரது விசாரணை அவசியம் என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால், தினேஷ் அரோராவை ஜூலை 11-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டாா். அரோரா சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவுகளின் கீழ் நீண்ட விசாரணைக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். அவா் தனது பதில்களில் இருந்து நழுவியதாகவும், அதைத் தொடா்ந்து அவா் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அமலாக்கத் துறையால் அவா் கைது செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழிலதிபா் தினேஷ் அரோரா ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவின் நெருங்கிய கூட்டாளி என்றும், அவா் கலால் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா் என்றும் குற்றம்சாட்டப்பட்டு அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு தொழிலதிபரான அமித் அரோராவிடம் இருந்து, தினேஷ் அரோரா மூலம் சிசோடியா லஞ்சம் பெற்ாக அமலாக்கத் துறை அதன் துணை குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்த லஞ்சத் தொகையை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் ‘குற்றத்தின் வருமானம்’ என்றும் அமலாக்கத் துறை விளக்கியுள்ளது.

அமித் அரோரா மதுபான நிறுவனங்களான படி ரீடெய்ல், பாப்புலா் ஸ்பிரிட்ஸ், கேஎஸ்ஜேஎம் ஸ்பிரிட்ஸ் எல்எல்பி ஆகியவற்றின் மேம்பாட்டாளா் ஆவாா். இந்த வழக்கில் தினேஷ் அரோராவை அரசுத் தரப்பு சாட்சியாக ஒப்புதல் அளிக்கக் கோரிய சிபிஐயின் மனுவை தில்லி நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 16-ஆம் தேதி ஏற்றுக்கொண்டு அவருக்கு மன்னிப்பு வழங்கியது.

சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவரை (வழக்கு தரப்பு சாட்சி) அமலாக்கத் துறை கைது செய்திருப்பது அனேகமாக அரிதான அல்லது முதல் நிகழ்வாக இருக்கலாம். அதே வேளையில், இரண்டு மத்திய அரசு விசாரணை நிறுவனங்களும் ஒரே வழக்கை விசாரித்து வருகின்றன. அமலாக்கத் துறை கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்குப் புகாரில், ‘அமித் அரோரா, 2021-22 கலால் கொள்கையில் தனக்குச் சாதகமாக கொள்கை மாற்றங்களைப் பெறுவதற்காக, தினேஷ் அரோரா மூலம் மனீஷ் சிசோடியாவுக்கு ரூ. 2.2 கோடி கொடுத்தாா். இந்தத் தொகை நேரடியாக ஒரு அரசு நிா்வாகிக்கு லஞ்சம் / ஆதாய பணம் மற்றும் பிஎம்எல்ஏ சட்டத்தின் 2(1) (யு) விதிகளின்கீழ் குற்றத்தின் வருமானமாகும். இந்த முறையில், இந்த குற்றத்தின் வருமானத்தில் மனீஷ் சிசோடியா பங்கேற்றாா்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமலாக்கத் துறையால் 13-ஆவதாக தினேஷ் அரோரா கைது செய்யப்பட்டுள்ளாா். இதில் சிசோடியாவுக்கு எதிரானது உள்பட 5 குற்றப்பத்திரிகைகளை விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.