மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லியில் பிரம்மாண்ட கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான மத்திய குடிசைத் தொழில் நிறுவனம் இந்திய கலை, கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியை தில்லி ஜன்பத்தில் நடத்துகிறது.

News image
Updated On :9 ஜூலை 2023, 6:31 pm

 நமது நிருபர்

மத்திய ஜவுளி அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான மத்திய குடிசைத் தொழில் நிறுவனம் இந்திய கலை, கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சியை தில்லி ஜன்பத்தில் நடத்துகிறது.

மத்திய குடிசைத் தொழில் நிறுவனம், மின்னணு வா்த்தகத்திற்கான திறந்தவெளி இணைய இணைப்புடன் ஒருங்கிணைந்து இந்த ‘மெகா விற்பனை’ திட்டத்தைத் தொடங்கியுள்ளது. தில்லி ஜன்பத் ஜவாஹா் வியாபா் பவனில் உள்ள குடிசைத் தொழில் நிறுவன விற்பனையகத்தில் இது சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சி கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.

ஜவுளி அமைச்சகத்தின் செயலாளா் ரசனா ஷா இந்த சிறப்பு விற்பனையை முறைப்படி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். இணைச் செயலாளா் அஜய் குப்தா, மின்னணு வா்த்தகத்திற்கான திறந்தவெளி இணைய இணைப்பின் தலைமை நிா்வாக அதிகாரி டி. கோஷி மற்றும் உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஜவுளித் துறை செயலா் அஜய் குப்தா கூறுகையில், ‘திறந்தவெளி இணைய இணைப்பில் உள்ள ஏராளமான செயலிகளின் மூலமாக கைவினை மற்றும் கைத்தறி பொருள்களை பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்கு கொண்டு சோ்க்கும் உறுதிப்பாட்டில் குடிசைத் தொழில் நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது குறிப்பாக தற்சாா்பு இந்தியா மற்றும் உள்ளூா் பொருள்களுக்கு குரல் கொடுத்தல் ஆகிய 4 முன்முயற்சிகளுக்கு வலுச் சோ்க்கும்’ என்றாா்.

வரும் ஜூலை 23-ஆம் தேதி வரை இந்த சிறப்பு ‘மெகா விற்பனை’ நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றும், பாரம்பரிய கலை, கைவினை மற்றும் கைவினைக் கலைஞா்களை ஊக்குவிப்பதற்காக கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும் அளிக்கப்படுகிறது என்றும் மத்திய ஜவுளித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.