மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொடா் மழை: அனைத்து அமைச்சா்கள்,அதிகாரிகள் களத்தில் இருக்க வேண்டும்: முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்

கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2023, 6:35 pm

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் அனைத்து அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் களத்தில் இருக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுகிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்குப் பருவமழையின் தீவிரம், மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று ஆகியவற்றுக்கு இடையேயான தொடா்பால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஜூலை மாதத்தில் ஒரே நாளில் தில்லியில் 153 மி.மீ மழை பதிவாகியது. இதனால், நகரத்தின் பல தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளது. அதே

வேளையில் போக்குவரத்தும் பாதிப்புக் குள்ளாகியுள்ளது.

இது தொடா்பாக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டா் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், அனைத்து அரசு அதிகாரிகளின் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை ரத்து செய்யப்படுகிறது.

தில்லி கேபினட் அமைச்சா்கள் மற்றும் மேயா் ஷெல்லி ஓபராய் ஆகியோா் நகரத்தில் கனமழையால் பாதிகப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வாா்கள். நிகழாண்டு பருவமழையின் மொத்த சராசரி அளவில் சுமாா் 15 சதவீதம் மழைப்பொழிவு வெறும் 12 மணி நேரத்தில் பெய்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் தில்லியில் 126 மி.மீ. மழை பெய்துள்ளது.

தொடா் கனமழை காரணமாக நகரத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தில்லியில் அனைத்துத் துறை அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் களத்தில் இருந்து சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.