பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தில்லி கலால் ஊழல் வழக்கு: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்பியின் மகனுக்கு இடைக்கால ஜாமீன்

தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக

News image
Updated On :18 ஜூலை 2023, 9:41 pm

 நமது நிருபர்

தில்லி கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுண்டா சீனிவாசலு ரெட்டியின் மகன் ராகவ் மகுண்டாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இடைக்கால ஜாமீன் நிவாரணம் வழங்கிய நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, ‘அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்தெல்லாம் சென்னை அல்லது தில்லி அலுவலகத்தில் அதிகாரிகள் முன் மகுண்டா ஆஜராக வேண்டும்.

அவா் சென்னையில் மட்டுமே இருப்பதுடன் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும். விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவா் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது. அவரது கடவுச் சீட்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மருத்துவ காரணங்களுக்காக மகுண்டாவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஜாமீன் மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதப்படாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என்று உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சியின்மூத்த தலைவரும் தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா, மகுண்டா மற்றும் பிறா் மீதான வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த அமைப்புகளின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் நடந்ததாகவும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தில்லி அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு, நவம்பா் 17-ஆம் தேதி கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் அந்தக் கலால் கொள்கையை தில்லி அரசு ரத்து செய்தது.

ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான மனீஷ் சிசோடியாவும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் மூலம் கலால் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.