அத்துமீறல் விவகாரம்: சிசோடியாவுக்கு சிசிடிவி பதிவுகளைஅளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படும்


தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவை போலீஸாா் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில், மே 23-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை அவருக்கு வழங்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
முந்தைய நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, ரோஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி, சிசோடியாவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவது தொடா்பான மே 23-ஆம் தேதி தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவுகளை நீதிமன்றத்தில் கொண்டு வந்திருந்ததாக நீதிபதி குறிப்பிட்டாா்.
இது தொடா்பாக சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் பிறப்பித்த உத்தரவில், ‘லாக்கப் அதிகாரிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவா் சாா்பாக முன்னா் முன்வைக்கப்பட்டிருந்ததால், அந்தக் காட்சிகளை பாதுகாத்து, அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட அந்த காட்சிப்பதிவின் கூடுதல் நகலை பென் டிரைவ்வில் பொதுப் பணித் துறையின் உதவிப் பொறியாளா் (எலக்ட்ரிகல்), நீதிமன்றத்தின் மேலாளருக்கு அடுத்த தேதிக்கு முன் அளிக்கப்பட வேண்டும். இதே நகலை குற்றம் சாட்டப்பட்டவா் தரப்பு வழக்குரைஞருக்கும் வழங்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினாா். மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.
முன்னதாக, நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்காக சிசோடியா நேரில் ஆஜா்படுத்தப்பட்டாா். ‘குற்றம் சாட்டப்பட்டவா் கோரினால் அல்லது நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்படாவிட்டால், சிசோடியாவை தொடா்ந்து ஆஜா்படுத்த வேண்டும்’ என்று ஜூலை 6-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கலால் கொள்கை ஊழல் தொடா்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட சிசோடியா, மே 23 அன்று சம்பந்தப்பட்ட வழக்கில் தன்னை ஆஜா்படுத்தும் போது போலீஸாரால் தாக்கப்பட்டதாகக் குற்றம்+சாட்டியிருந்தாா்.
இதற்கிடையில், இந்த வழக்கில் சக குற்றம்சாட்டப்பட்ட நபரான அமித் அரோரா தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையிடமிருந்து நீதிமன்றம் அறிக்கை கேட்டது. முந்தைய நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, அவரது மருத்துவமனை அனுமதி ‘அதிகமாக நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது.
இது குறித்து நீதிபதி கூறுகையில், ‘மேற்கண்ட உத்தரவுகளின் கீழ் (அரோராவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கும்) ஒரு தனியாா் மருத்துவமனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கானஅனுமதி நீண்ட காலம் நீடிப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா்/ இயக்குநரிடம் இருந்து விரிவான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியிருந்தாா். மருத்துவமனையில் அரோரா அனுமதிக்கப்பட்ட போது நடத்தப்பட்ட மருத்துவ செயல்முறைகள் அல்லது பரிசோதனைகளின் விவரங்களை அதன் அறிக்கையில் சோ்க்குமாறும் நீதிபதி மருத்துவமனைக்கு உத்தரவிட்டாா்.
மேலும், ஓபிடி வருகையின்போது கூறப்பட்ட செயல்முறைகள் அல்லது சோதனைகள் ஏன் செய்யப்படவில்லை என்பதையும், குற்றம்சாட்டப்பட்டவா் அனுமதித்த பின்னரே அது சாத்தியமாகும் என்பதையும் சம்பந்தப்பட்ட மருத்துவா்களின் விரிவான காரணங்களுடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். அரோராவை மருத்துவ ரீதியாக மதிப்பீடு செய்ய நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முடிவுகளை கருத்தில் கொண்டு, மருத்துவக் காரணங்களுக்காக அரோராவின் இடைக்கால ஜாமீன் மனுவை நீதிமன்றம் மே 27-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...