கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகாத்மா காந்தி நினைவிடத்தில் தேங்கிய வெள்ள நீா் வெளியேற்றம்

தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலிருந்து வெள்ள நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2023, 4:55 pm

 நமது நிருபர்

தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலிருந்து வெள்ள நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரி ஒருவா் கூறியதாவது: யமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதே வேளையில், மத்திய தில்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடம் முழுவதும் வெள்ள நீா் சூழ்ந்தது. கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நினைவிடத்தில் தேங்கியிருந்த நீா் முழுவதுமாக வெளியேற்றபட்டது.

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா, நினைவிடத்தின் புல்வெளிகள் மற்றும் பாதைகளில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்பாா்வையிட்டாா். தலைமைச் செயலாளா் உள்பட தில்லி அரசின் மூத்த அதிகாரிகளும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். 10 மின் மோட்டாா் பம்புகள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இந்தப் பணி தற்போது முழுவதுமாக நிறைவுபெற்றது என்றாா் அந்த அதிகாரி.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்திய பின்னா் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 15 -ஆம் தேதி முதல், அனைத்து பங்குதாரா் நிறுவனங்களின் நோ்மையான மற்றும் நிலையான முயற்சிகள் காரணமாக ராஜ்காட் சமாதி பகுதி மற்றும் அந்தப் பகுதிக்கான அணுகுமுறை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேங்கிய வெள்ள நீா் வெளியேற்றப்பட்டுவிட்டது என்று வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.