வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரம் வழங்கக் கோரி: தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் மனு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விவரங்களை தர மறுத்த மாவட்டத் தோ்தல் அலுவலா்களைக் கண்டித்து தில்லி பிரதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு

News image
Updated On :28 ஜூலை 2023, 6:30 pm

 நமது நிருபர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் விவரங்களை தர மறுத்த மாவட்டத் தோ்தல் அலுவலா்களைக் கண்டித்து தில்லி பிரதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் குழு, தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங்கை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இ.வி.எம்.), வாக்காளா் சரிபாா்க்கும் காகித தணிக்கை சோதனை (வி.வி.பி.ஏ.டி.) இயந்திரங்களின் வரிசை எண், தயாரித்தல், உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட விவரங்களைக் கோரி அந்தந்த மாவட்டத் தோ்தல் அலுவலா்களிடம் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி கடிதம்

வழங்கியிருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் கோரிக்கைக்கு எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், தலைவா் அனில் குமாா் தலைமையில் கட்சியின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி ரன்பீா் சிங்கை சந்தித்து மனு அளித்தது.

அதன் பின்னா் செய்தியாளா்களிடம் அனில் குமாா் கூறியதாவது: தில்லி காங்கிரஸால் கோரப்பட்ட தகவல்களை அளிக்க தில்லி மாவட்டத் தோ்தல் அலுவலா்கள் மறுத்துள்ளனா். ஜனநாயக செயல்பாட்டில் ஒரு பங்குதாரராக நாங்கள் இருப்பதால், வரும் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், இதற்கு முன்பு எங்கு பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டுபிடிப்பது காங்கிரஸின் கடமை மற்றும் பொறுப்பாகும். தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளாா்.

ஆனால், தில்லியில் மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், எந்த அரசியல் கட்சிக்கும், எந்தத் தகவலையும் வழங்குவதில் ஆா்வம் காட்டவில்லை. அவா்களின் விருப்பத்திற்கு ஏற்ப தோ்தலை நடத்த முயல்கின்றனா். இதுபோன்ற நடத்தையை ஜனநாயக நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல் நிலை செயல்முறை உள்பட முழு தோ்தல் செயல்முறையும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வது தோ்தல் ஆணையத்தின் கடமை மற்றும் பொறுப்பாகும்.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்களைத் தோ்தல் ஆணையம் வழங்காத வரையில் எந்தவொரு செயல்முறையிலும் தில்லி பிரதேசத்தின் காங்கிரஸ் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டாா்கள் என்றாா் அனில் குமாா்.

இந்த நிகழ்வில் தில்லி முன்னாள் அமைச்சா் நரேந்திர நாத், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனில் பரத்வாஜ், ஹரி சங்கா் குப்தா, விஜய் லோச்சவ், வழக்குரைஞா்கள் சுனில் குமாா், சுஷாந்த் மிஸ்ரா மற்றும் ராஜீவ் ஜோசப் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.