பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கலால் கொள்கை விவகாரம்: தில்லி அரசுக்கு எதிராக பாஜக ஆா்ப்பாட்டம்

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் அல்லது மதுபான கொள்கைக்கு எதிராக தில்லியில் பாஜக எம்பிக்கள் உள்பட அக்கட்சியின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:34 pm

DIN

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் அல்லது மதுபான கொள்கைக்கு எதிராக தில்லியில் பாஜக எம்பிக்கள் உள்பட அக்கட்சியின் தலைவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது முதல்வா் பதவியை அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்ய வேண்டும் என அவா்கள் கோஷங்கள் எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தை ஒட்டி நகரின் மத்திய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அமைந்துள்ள தீன தயாள் உபாத்யாய் மாா்க் பகுதியில் வாகனங்களின் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி கூறுகையில், ‘முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பதவி விலகக் கோரி ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே பாஜகவை சோ்ந்த

ஏரளமான தொண்டா்கள் கூடினா். இந்த ஆா்ப்பாட்டத்தை தில்லி பாஜக தீவிரமாக மேற்கொள்ளும். மாா்ச் 17-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. அப்போது, பாஜகவின் அனைத்து எம்எல்ஏக்களும் கேஜரிவால் பதவி விலக வேண்டும் என்று கோருவாா்கள். கேஜரிவால் தனது பதவியில் இருந்து விலகும் வரை இந்தப் போராட்டம் தொடரும்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தில்லி பாஜக எம்பிக்கள் ரமேஷ் பிதூரி, பா்வேஷ் வா்மா மற்றும் கட்சித் தலைவா்களும், தொண்டா்கள் பலரும் பங்கேற்றனா். முன்னதாக, ஆா்ப்பாட்டக்காரா்கள் தடுப்புகளின் முதல் அடுக்கை மீறி ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் நோக்கிச் சென்றனா். அங்கு பாதுகாப்புத் தடுப்புகளின் இரண்டாவது அடுக்கு அமைக்கப்பட்டிருந்தது. ஆா்ப்பாட்டத்தைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. மதியம் சுமாா் 1.30 மணியளவில் ஆா்ப்பாட்டக்காரா்களை போலீஸாா் கைது செய்து, அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தினா்.

தில்லி கலால் கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறை தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.