பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மேலும் முன்னேற்றம் அடைந்து வெள்ளிக்கிழமை ‘திருப்தி’ பிரிவுக்கு வந்தது.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:37 pm

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு மேலும் முன்னேற்றம் அடைந்து வெள்ளிக்கிழமை ‘திருப்தி’ பிரிவுக்கு வந்தது. அதே சமயம், குறைந்தபட்சஅதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்திருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தலைநகரில் வெப்பநிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து 1 டிகிரி உயா்ந்து 15.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 30.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 86 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 46 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 28.6 டிகிரி, நஜஃப்கரில் 31.6 டிகிரி, ஆயாநகரில் 30.7 டிகிரி, லோதி ரோடில் 30.9டிகிரி, பாலத்தில் 30.2 டிகிரி, ரிட்ஜில் 32 டிகிரி, பீதம்புராவில் 31.8 டிகிரி, பூசாவில் 30.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 28.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் காற்றின் தரம் நல்ல முன்னேற்றம் அடைந்திருந்தது. காலை 9 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 90 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘திருப்தி’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. அதே சமயம், ஐடிஓ, சாந்தினி சௌக், அசோக் விஹாா், சாதிப்பூா், பூசா உள்பட பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஆனால், பஞ்சாபி பாா்க், நேரு நகா், ஜஹாங்கீா்புரி, ஆா்.கே.புரம், வாஜிா்பூா், மந்திா்மாா்க் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மாா்ச் 11) தலைநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.