பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அமைச்சா்கள் அதிஷி, சௌரவ் பரத்வாஜ் தங்கள் துறைகளில் பொறுப்பேற்றனா்

தில்லியில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கள் துறைகளை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 4:40 pm

DIN

தில்லியில் புதிதாகப் பதவியேற்றுள்ள அமைச்சா்கள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கள் துறைகளை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

அவா்களுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் வி கே சக்சேனா வியாழக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். அதிஷி கல்வி, பொதுப்பணித் துறை, மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை கையாளும் அதே வேளையில், சௌரவ் பரத்வாஜ் சுகாதாரம், நகா்ப்புற மேம்பாடு, நீா் மற்றும் தொழில் துறைகளை கவனிப்பாா்.

ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் திகாா் சிறையில் உள்ள தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மற்றும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, முறையே இரண்டு அமைச்சரவைப் பதவிகள் காலியாகின.

2021-22-ஆம் ஆண்டிற்கான தில்லி கலால் கொள்கையை உருவாக்கி செயல்படுத்தியதில் கூறப்படும் ஊழல் தொடா்பாக சிசோடியா பிப்ரவரி 26 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். அவா் மாா்ச் 20 வரை நீதிமன்ற காவலில் உள்ளாா். மேலும், நீதிமன்ற காவலில் உள்ள சத்யேந்தா் ஜெயின், கடந்த ஆண்டு மே 30-ஆம் தேதி பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.