பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

கலால் ஊழல்: அமலாக்கப் பிரிவு 5-ஆவது குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை

News image
Updated On :4 மே 2023, 6:37 pm

 நமது நிருபர்

தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் பெயா் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவா் முக்கிய சதிகாரா் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் அமலாக்கப் பிரிவால் கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி தில்லி முன்னாள் முதல்வா் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு ஏற்கெனவே தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு மூன்று முறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நான்காவது முறையாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மனீஷ் சிசோடியா பெயா் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. இதில் மனீஷ் சிசோடியா ‘முக்கிய சதிகாரா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 270 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில் 2,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. 51 வயதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சிசோடியா உள்பட 12 போ் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தொடா் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.

தில்லி அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்ாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இது தொடா்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி வலுவாக மறுத்து வருகிறது. ஆனால், இதில் ரூ. 100 கோடி வரை ‘சௌத் க்ரூப்’ என்று சொல்லப்படும் ஆந்திரா, தெலாங்கான புள்ளிகள் மூலம் பேரம் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விஜய் நாயா், மனீஷ் சிசோடியா முக்கிய மையமாக இருந்த கைது செய்யப்பட்டனா். இவா்கள்ஆம் ஆத்மியின் மற்ற உயா்நிலைத் தலைவா்களின் ஒட்டுமொத்த வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் கீழ் பணியாற்றினா் என அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த கலால் கொள்கை விவகாரம் தொடா்பாக துணை நிலை ஆளுநரால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்ட பிறகு, சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தது. தொடா்ந்து அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்தது. இந்த கலால் கொள்கை தில்லி அரசால் பின்னா் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.