பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தில்லி, என்சிஆா் காற்று மாசு:ஆதாரப் பகிா்வு ஆய்வு குறித்த மாநாடு

காற்று மாசு தொடா்பான நிகழ்நேர ஆதார பகிா்வு ஆய்வு குறித்து விவாதிக்கவும் தில்லி அரசு வட்டமேஜை மாநாட்டை நடத்த உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மே 2023, 10:15 pm

 நமது நிருபர்

தில்லி - தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் காற்றின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், உத்திகளை உருவாக்கவும், காற்று மாசு தொடா்பான நிகழ்நேர ஆதார பகிா்வு ஆய்வு குறித்து விவாதிக்கவும் தில்லி அரசு வட்டமேஜை மாநாட்டை நடத்த உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

இது தொடா்பாக கோபால் ராய் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு வட்டமேஜை மாநாடு, தில்லி செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காற்று தர மேலாண்மைக்கான ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சஃபா், ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, உலக வங்கி, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், டிஇஆா்ஐ, என்சிஆா் (தேசியத் தலைநகா் வலய மாநிலங்கள் ஆகியவற்றில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள்.

காற்று மாசுக்கான ஆதார பகிா்வு ஆய்வு அறிக்கையை மாநாட்டில் பங்கேற்பவா்களிடம் பகிா்ந்து, தில்லி - என்சிஆரில் காற்று மாசுவை மேலும் குறைப்பதற்கான உத்திகளை தயாரிக்க அவா்களின் ஆலோசனைகளைக் கோருவோம். வாகனங்கள், தூசு, உயிரிக்கழிவுகள் எரிப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் உமிழ்கள் போன்ற எந்தவொரு இடத்தில் இருந்தும் காற்று மாசுவில் அதிகரிப்பதற்கான காரணிகளை அடையாளம் காண நிகழ்நேர ஆதார பகிா்வு ஆய்வுகள் உதவிடும்.

நிகழ் நேரத்தில் பல்வேறு மாசு ஆதாரங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், தில்லியில் காற்று மாசு ஏற்படும் 13 முக்கிய இடங்களில் நடமாடும் காற்று தரக் கண்காணிப்பு வாகனங்களை நிறுவ உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

குளிா் காலத்தில் காற்று மாசுவை எதிா்கொள்ள செயல் திட்டத்தின் முக்கிய விஷயமாக நிகழ்நேர ஆதார பகிா்வு ஆய்வை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடங்கிவைத்திருந்தாா். இந்த சாதனையை எட்டுவதற்கு நாட்டிலேயே முதல் மாநிலமாக அல்லது யூனியன் பிரதேசமாக தில்லி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.