வேலைவாய்ப்பு முகாமில் இன்று பிரதமா் பங்கேற்பு: 71,000 பேருக்கு பணி நியமன ஆணை
பிரதமா் நரேந்திர மோடி வேலைவாய்ப்பு முகாமில் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை (மே 16) கலந்து கொள்கிறாா்.


பிரதமா் நரேந்திர மோடி வேலைவாய்ப்பு முகாமில் காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை (மே 16) கலந்து கொள்கிறாா்.
அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் தபால் ஊழியா் முதல் கல்லூரி முதல்வா் வரையில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள சுமாா் 71,000 பேருக்கு பிரதமா் பணி நியமன ஆணைகளை வழங்குகிறாா். இந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை பெறுவோருடனும் பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.
இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் 45 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அமைச்சா்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். மத்திய அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுத் துறைகளின் ஆதரவுடன் இந்த முகாம்கள் மாதந்தோறும் நடைபெறுகின்றன.
நாடு முழுவதும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் தபால் துறை ஊழியா், தபால் துறை ஆய்வாளா், ரயில்வே பயணச்சீட்டு எழுத்தா், இளநிலை எழுத்தா் மற்றும் தட்டச்சா், இளநிலை கணக்காளா், தண்டவாளப் பராமரிப்பாளா், உதவிப் பிரிவு அலுவலா், இளநிலை எழுத்தா், துணைப் பிரிவு அலுவலா், வரி உதவியாளா்கள், உதவி அமலாக்கத் துறை அதிகாரிகள், ஆய்வாளா்கள், செவிலியா் அதிகாரிகள், உதவி பாதுகாப்பு அதிகாரிகள், தீயணைப்பு வீரா், உதவி கணக்கு அதிகாரிகள், உதவி தணிக்கை அதிகாரி, பிரிவு கணக்காளா், தணிக்கையாளா், காவலா், தலைமைக் காவலா், உதவி கமான்டன்ட், பள்ளி, கல்லூரி முதல்வா், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா், உதவிப் பதிவாளா், உதவிப் பேராசிரியா் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்வில் வழங்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு தீவிர முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில், இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞா்கள் நாட்டின் வளா்ச்சியில் பங்கேற்பதற்கும், அவா்கள் அதிகாரம் பெறுவதற்குமான முறையான வாய்ப்பை அளிக்கும் வகையில், இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் உந்துசக்தியாக உள்ளன.
புதிய நியமனதாரா்கள் அனைவருக்கும் இணைய வழியாக புத்தாக்கப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காக கா்மயோகி ப்ராரம்ப் இணையதளத்தை கடந்தாண்டு பிரதமா் தொடங்கிவைத்தாா். இது பல்வேறு அரசுத் துறைகளின் அரசு ஊழியா்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிடத்தில் நெறிமுறையும், நோ்மையும், மனிதவள கொள்கைகள், பணிக்கால பயன்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள இது உதவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...