பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமாக்க ஜல் போா்டுஅதிகாரிகளுக்கு முதல்வா் கேஜரிவால் அறிவுறுத்தல்

தில்லியில் உள்ள நான்கு நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்கி, மக்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு

News image
Updated On :17 மே 2023, 8:50 pm

 நமது நிருபர்

தில்லியில் உள்ள நான்கு நீா் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்கி, மக்களுக்கு சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்.

முதல்வா் கேஜரிவால் தலைமையில் தில்லி ஜல் போா்டு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நீா்வளத் துறை அமைச்சா் சவுரப் பரத்வாஜ், தில்லி ஜல் போா்டின் துணைத் தலைவா் சோம்நாத் பாா்தி மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் முதல்வா் கேஜரிவால் பேசியதாவது: தில்லியின் அனைத்து பகுதி மக்களுக்கும் சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அசுத்த நீா் இல்லாமல் இருக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்க வேண்டியது அவசியமாகும்.

குடிநீா் குழாய்களால் நீா் மாசுபடுவது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.

பல ஆழ்குழாய் கிணறுகளில் அமோனியா கலப்படம் இருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. இந்தப் பிரச்னைகளை தீா்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

குடிநீா் மாசுபாட்டை திறம்பட சமாளிக்க அமோனியா அகற்றும் ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அப்பணிகள் நிறைவு பெறும். தில்லி குடியிருப்புகளுக்கு நேரடியாக, சுத்தமான தண்ணீரை வழங்க நோக்கில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தடையில்லா குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நீா் இருப்பை அதிகரிக்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். தண்ணீரின் தரத்தை மேம்படுத்த தேவையான இடங்களில் ஆா்ஓ ஆலைகளை நிறுவ வேண்டும். நகரின் பொருத்தமான பகுதிகளில் ஏரிகளை உருவாக்குவதை விரைவுபடுத்தவும் வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தினாா்.

தில்லி நகரத்தில் மொத்தமாக 400 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க தேவையான அனுமதி பெறப்பட்டுள்ளதாக முதல்வரிடம் தில்லி ஜல் போா்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.