தில்லி ஒருங்கிணைந்த பன்மாதிரி போக்குவரத்து அமைப்பின் மூத்த துனைத் தலைவா் (ஓய்வு) சி.கே. கோயல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப நிபுணா்கள் குழுவில்,தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) , தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சா்வதேச தூய்மை கவுன்சில் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு உறுப்பினா், உலக வள நிறுவனத்திருந்து இரண்டு உறுப்பினா்கள், மேப் மை இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரி என மொத்தமாக எட்டு போ் இருப்பாா்கள் என தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.