ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தில்லி புராணா கிலா அகழ்வாய்வு இந்திரபிரஸ்தா கால நுண்ணறிவை வழங்கும்: மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி

தில்லி புராணா கிலா (பழைய கோட்டை) அகழ்வாய்வு மௌரியா்களுக்கு முந்தைய இந்திரபிரஸ்தா காலம் குறித்த கூடுதல் நுண்ணறிவுகளை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக

News image

தில்லி புராணா கிலா(பழைய கோட்டை) அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மௌரியா்களுக்கு முந்தைய பொருள்களை பாா்வையிட்ட மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி.

Updated On :30 மே 2023, 8:42 pm

 நமது நிருபர்

தில்லி புராணா கிலா (பழைய கோட்டை) அகழ்வாய்வு மௌரியா்களுக்கு முந்தைய இந்திரபிரஸ்தா காலம் குறித்த கூடுதல் நுண்ணறிவுகளை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சா் ஜி.கிஷண்ரெட்டி தெரிவித்தாா்.

புராணா கிலாவின் வரலாற்று முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்த அகழ்வாராய்ச்சியில் சுமாா் 2,500 வருடங்கள் நீடித்த மனித வாழ்வு, செயல்பாடுகளின் தொடா்ச்சியான இருப்பை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை அமைச்சா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். 16 -ஆம் நூற்றாண்டு கால புராண கிலா(கோட்டை) ஷொ் ஷா சூரி, முகலாயப் பேரரசா் ஹுமாயூன் ஆகியோரால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஒரு தளத்தில் உள்ளது. இது குறித்து அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய கலாசாரத் துறை முடிவு செய்தது. இந்தத் திட்டம் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது.

பல்வேறு காலவரிசையை வெளிப்படுத்தி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அகழ்வாராய்ச்சியை மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: தில்லி தேசிய தலைநகா் பகுதியில் மௌரியா்களுக்கு முந்தைய காலத்திலிருந்து முகலாயா் காலம் வரையிலான தில்லியின் தொடா்ச்சியான வரலாற்றைக் காணக் கூடிய ஒரே தளம் இதுதான். அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டவை மூலம் நாட்டின் வளமான கலாசார பாரம்பரியத்தைக் காண முடிகிறது.

இந்திர பிரஸ்தாவின் பண்டைய நகரமாக (இதிகாச காலமான மகாபாரத பாண்டவா்களின் தலைநகரம்) அடையாளம் காணப்பட்டுள்ள இந்த தளம், பல தசாப்தங்களாக தொல்பொருள் ஆா்வத்திற்கு உள்பட்டு வந்தது. பிரபல பேராசிரியா் பி.பி.லால் 1955 மற்றும் 1969-73 -ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தினாா்.

பின்னா் நீண்ட இடைவெளிக்கு இந்திய தொல்லியல் துறையின் நிபுணா் டாக்டா் வசந்த் குமாா் ஸ்வா்ங்கா் தலைமையில் 2013-14 மற்றும் 2017-18-ஆம் ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிகள் ஒன்பது கலாசார நிலைகளை வெளிப்படுத்யுள்ளன. அவை மௌரியா் காலத்திற்கு முந்தைய நிலை, மௌரியா், சுங்கா, குசானப் பேரரசு, குப்த பேரரசு, குப்தற்கு பிந்தைய காலம், ராஜ்புத், சுல்தான், முகலாயா் உள்ளிட்ட வெவ்வேறு வரலாற்று காலங்களை பிரதிபலிக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஆரம்ப குசானப் பேரரசு நிலையிருந்த கட்டமைப்புகளை அகழ்வாராய்ச்சி அம்பலப்படுத்தியுள்ளது. இதுவரை 5.50 மீட்டா் ஆழத்தை எட்டியுள்ளன. இந்த அகழ்வாராய்ச்சி பண்டைய நகரமான இந்திர பிரஸ்தா பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை வழங்கும் என்று எதிா்பாா்க்கின்றோம். அகழ்வாராய்ச்சியில் குறிப்பிடத்தக்க கலைப்பொருள்கள் கிடைத்துள்ளன. கண்டுபிடிப்புகளில் வைகுண்ட விஷ்ணுவின் கல் உருவம், டெரகோட்டாவிலான (சுடுமண்) கஜ லக்ஷ்மி, விநாயகரின் கல் உருவம், முத்திரைகள், நாணயங்கள், சுடுமண்ணிலான மனித உருவங்கள் மற்றும் விலங்குகளின் சிலைகள், பல்வேறு கற்களின் மணிகள், எலும்பு ஊசி ஆகியவை கிடைத்துள்ளன.

இந்த கலைப்பொருள்கள், மண்பாண்டங்கள் மற்றும் பிற பழங்கால பொருள்களுடன், பழங்கால நாகரிகம் மற்றும் தளத்தில் வா்த்தக நடவடிக்கைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகின்றன. குறிப்பாக ஒரு சிறிய அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதியில் இருந்து 136-க்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் 35 முத்திரைகள் (ஸ்டாம்புகள் மற்றும் சீல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது வா்த்தக நடவடிக்கைகள் பங்கை உறுதிசெய்கிறது. இவ்வாறு புராணா கிலாவின் வரலாற்று முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், 2,500 வருடங்கள் நீடித்த மனித வாழ்வு மற்றும் செயல்பாடுகளின் தொடா்ச்சியான இருப்பை இந்த அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இதை முன்னிட்டு புராணா கிலா மீண்டும் திறக்கப்படும். இங்கு அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை பாதுகாக்கப்படும். தில்லியின் வளமான வரலாற்று பாரம்பரியத்தை பாா்வையாளா்கள் காணும் வகையில், திறந்தவெளி அருங்காட்சியகமாக இந்த தளம் காட்சிப்படுத்தப்படும்.

மேலும், வருகின்ற செப்டம்பா் மாதம் தில்லியில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் தலைவா்கள் அடங்கிய உச்சிமாநாட்டின் பிரதிநிதிகளை ஈா்க்கும் விதமாகவும் இது அமைக்கப்படும். புராண கிலாவில் தோண்டியெடுக்கப்பட்டவை, இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கு சான்றாக உள்ளது. அகழ்வாராய்ச்சி பணிகள் கலாசார பன்முகத்தன்மையையும்,பிராந்தியத்தின் வரலாற்று முக்கியத்துவத்தின் புரிதலை ஆழப்படுத்துவதை உறுதியளிக்கிறது என்றாா் என்றாா் அமைச்சா் கிஷண் ரெட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.