ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஷாபாத் டெய்ரி கொலைச் சம்பவம்: கைதான இளைஞரிடம் 2 நாள் காவலில் விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது மைனா் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கான்கிரீட் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான

News image
Updated On :30 மே 2023, 8:43 pm

 நமது நிருபர்

வடமேற்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் 16 வயது மைனா் பெண் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு, கான்கிரீட் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான இளைஞரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல் துறைக்கு நகர நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்தக் கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சாஹில் (20), பணியில் இருந்த பெருநகர மாஜிஸ்திரேட் ஜோதி நய்ன் முன் ஆஜா்படுத்தப்பட்டாா். அவா் விசாரணை நடத்தும் போலீஸாரின் வேண்டுகோளை கவனத்தில் கொண்டு சாஹிலை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தாா். போலீஸ் காவல் விசாரணையின் போது சாஹில் குற்றத்தில் ஈடுபட்டதற்கான நோக்கம், அவா் செய்த குற்றம், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்பதை உறுதிப்படுத்துவது போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவா் வழக்கமான நீதிமன்ற நேரத்திற்கு முன்பாகவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். வடமேற்கு தில்லியில் உள்ள ஷாபாத் டெய்ரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள் கண்முன் சாக்ஷி என்ற 16 வயது பெண் கொடூரமாக கொல்லப்பட்டாா். அவரது உடலில் 34 காயங்கள் இருந்ததாகவும், அவரது மண்டையோடு சிதைக்கப்பட்டதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட சாஹில் தனது வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதாலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் அவரிடமிருந்து இன்னும் மீட்கப்படவில்லை என்பதாலும், அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் கோரப்பட்டிருந்தது. முன்னதாக, இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு சாஹில் உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டாா். அவரது தந்தைக்கு அத்தையிடமிருந்து வரப்பெற்ற தொலைபேசி அழைப்பைத் தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் சாஹில் இருப்பது போலீஸாரால் கண்டறியப்பட்டது. கைதான சாஹிலை அங்கு மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு, திங்கள்கிழமை மாலை தில்லிக்கு போலீஸாா் அழைத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.