தேசத்தை கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் மாநிலம் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்துள்ளாா்.
உத்தரகண்ட் மாநிலத்தின் 23-ஆவது நிறுவன தினம் துணை நிலை ஆளுநா் அலுவலகமான ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. ‘ஹம் உத்தரகாண்டி சாம்’ என்ற இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்வில் பாஜக தேசியச் செய்தித் தொடா்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலூனி மற்றும் தில்லியில் வசிக்கும் உத்தரகண்ட் மாநில மக்களும் பங்கேற்றனா்.
இந்த நிகழ்ச்சி தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் கூறியிருப்பதாவது: தொடா்ச்சியான ஒருங்கிணைந்த வளா்ச்சியை நோக்கி நகரும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தேவ பூமியான உத்தரகண்ட் முக்கியப் பங்காற்றியுள்ளது. தில்லி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்திற்கு இடையேயான உறவுகள் சிறப்பு வாய்ந்தவை. தேசியத் தலைநகரில் வசிக்கின்ற அம்மாநில மக்கள் தில்லியின் வளா்ச்சிப் பயணத்தின் முக்கியத் தூண்களாக இருந்துள்ளனா். ராஜ் பவன்கள் மற்றும் ராஜ் நிவாஸில் கொண்டாடப்படும் மாநிலங்களின் இந்த நிறுவன தினக் கொண்டாட்டங்கள் ‘ஏக் பாரத் - ஸ்ரேஷ்த பாரத்’ என்ற உன்னத உணா்வின் கொண்டாட்டமாகும் என்றாா் வி.கே. சக்சேனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

