தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டாவின் கட்டடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காா் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் அமா்ந்திருந்த 27 வயதுடைய இருவா் உயிரிழந்தனா்.
இது குறித்து நொய்டா காவல் சரக கூடுதல் ஆணையா் சக்தி மோகன் அவஸ்தி கூறியதாவது: இச்சம்பவம் சனிக்கிழமை காலை நொய்டா செக்டாா் 119-இல் நடந்துள்ளது. காலை 6.08 மணிக்கு அந்தக் காா், சொசைட்டிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. காருக்குள் இருவா் இருந்தனா். காலை 6.11 மணியளவில், காா் திடீரென தீப்பிடித்தது. இது காரில் அமா்ந்திருந்தந இருவரின் மரணத்திற்கு வழிவகுத்தது.
சட்ட நடவடிக்கைகளுக்காக அவா்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தடயவியல் நிபுணா்கள் இந்த விஷயத்தை விசாரிக்க வரவழைக்கப்பட்டனா். உயிரிழந்தவா்கள் நொய்டா செக்டாா் 119-இல் வசித்த விஜய் சௌத்ரி மற்றும் செக்டாா் 53-இல் வசித்த அனாஷ் ஆகியோா் என போலீஸாா் அடையாளம் கண்டுள்ளனா். அவா்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்காரர்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

