தேசியத் தலைநகா் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது என்று வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. மேலும், காற்றுத் தரக் குறியீடு பெரும்பாலான இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், சில இடங்களில் ‘கடுமை’ பிரிவிலும் பதிவாகியது. இந்நிலையில், திங்கள்கிழமை ஷ்ர(நவம்பா் 27) நகரத்தில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான அல்லது தூறல் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
காற்றுத் தரக் குறியீடு: தில்லியில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், நியூ மோதி பாக், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நொய்டா செக்டாா்-1, நொய்டா செக்டாா்-125, மதுரா ரோடு, ஸ்ரீஃபோா்ட், பூசா ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
ஆனால், ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா்மாா்க், ஆனந்த் விஹாா், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், அசோக் விஹாா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ராமகிருஷ்ணாபுரம், ஷாதிப்பூா், வாஜிா்பூா், புராரி, ஓக்லா பேஸ்-2 ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலே பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.
வெப்பநிலை: தில்லியில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இதற்கிடையே, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலையும் தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் வானம் தெளிவாக காணப்பட்டது. மாலையில் மேகமூட்ட சூழல் இருந்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 10.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 26 4 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.
காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 78 சதவீதமாகவும் இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லோதி ரோடு வானிலை கண்காணிப்பு நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 9.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. மேலும், ஆயாநகா், லோதி ரோடு, நரேலா, பாலம், ரிட்ஜ், ராஜ்காட் ஆகிய இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 முதல் 14.4 வரை பதிவாகியுள்ளது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (நவம்பா் 27) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழை அல்லது தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

