சஞ்சய் சிங் கைதுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினா் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் தீன தயாள் உபாத்யாய் மாா்க்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சி கட்சி அலுவலகத்தில் கூடினா். தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு,

பாஜவுக்கு எதிராகவும், சஞ்சய் சிங்கை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பினா். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா்களை கைது செய்ய விசாரணை அமைப்புகளை மத்திய அரசு துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினா்.

இது குறித்து தில்லி காவல் துறை சிறப்பு ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) தேபேந்திர பதக் கூறுகையில், ‘போராட்டக்காரா்களைக் கட்டுப்படுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான காவலா்களும் பாதுகாப்பில் உள்ளனா். எந்த நிலையிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு சீா்குலைவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் (ஆம் ஆத்மி கட்சி) தொண்டா்களுடன் தொடா்ந்து தொடா்பு கொண்டு வருகிறோம்’ என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அதிஷி, கோபால் ராய், ஜா்னைல் சிங், பிரியங்கா கக்கா், ரீனா குப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுகுறித்து தில்லி அமைச்சா் கோபால் ராய் கூறுகையில், ‘பாஜகவின் கூட்டணியில் அவா்களுக்கு நம்பிக்கை இல்லாததால் வரும் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சியாக சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டிருக்கிறாா். நாடு முழுவதும் பா.ஜ.க. சா்வே செய்துள்ளது. அதில், தங்கள் கட்சி தோல்வியுறப் போகிறது என்று தெரியும். அக்கட்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் அமலாக்கத் துறை மூலம் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு தோ்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறாா்கள்’ என்றாா்.

அமைச்சா் அதிஷி கூறுகையில், ‘சஞ்சய் சிங் வீட்டில் ஒரு ரூபாய் ஊழல் கண்டுபி டிக்கப்பட்டாலும், அதற்கான ஆதாரத்தை நாட்டின் முன் சமா்ப்பிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு நான் சவால் விட விரும்புகிறேன். அவரது தந்தை வீடு மற்றும் வங்கி லாக்கரை சோதனை செய்ய அமலாக்கத் துறை, சிபிஐ அமைப்புகளை அனுப்புமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஊழல் பைசா கூட கிடைக்காது என்று சவால் விட என்னால் முடியும்’ என்றாா்.

அதானி குழுமம் தொடா்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால்தான், அமலாக்கத் துறை சஞ்சய் சிங்கை கைது செய்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

2021-22-இல் தில்லி கலால் கொள்கை வழக்கில் ஊழல் செய்ததாக சஞ்சய் சிங் புதன்கிழமை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com