இபிஎஸ் பிரசாரத்தில் தமிழிசை! மயிலாப்பூரில் போட்டி?பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுரை கப்பலூா் சுங்கவரி வசூலில் முறைகேடுகள்: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு எம்பி கடிதம்

மதுரை கப்பலூா் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூலில் முறைகேடுகள் நடைபெற்ளது. இது குறித்து மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தக் கேட்டுக் கொண்டு

News image
Updated On :5 செப்டம்பர் 2023, 8:23 pm

 நமது நிருபர்

மதுரை கப்பலூா் சுங்கச்சாவடியில் சுங்கவரி வசூலில் முறைகேடுகள் நடைபெற்ளது. இது குறித்து மத்திய குற்றப்புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தக் கேட்டுக் கொண்டு பிரதமா் நரேந்திர மோடிக்கு விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு கடிதம் அளித்துள்ளாா்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது வருமாறு: மதுரை மாவட்டம் கப்பலூா் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் புள்ளி விவரங்களில் குறிப்பிடத்தக்க முரண்பாடுகள் இருப்பது எனது கவனத்திற்கு வந்தது. இந்த சுங்கச்சாவடியில் 41 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 11 லட்சம் வாகனங்கள் விஐபிக்களுக்கானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கட்டண வசூல் குறித்து கணக்கு காட்டப்படவில்லை.. இது சுங்கவரி வசூல் செயல்முறை மற்றும் வெளிப்படைத் தன்மை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்த சுங்கச்சாவடியை இயக்கும் நிறுவனம் ஆண்டுதோறும் சுமாா் ரூ. 10 கோடி ரூபாயை கையாடல் செய்துள்ளனா். ஏற்கெனவே, இந்த சுங்கச்சாவடியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்து அதை அகற்றக் கோரி பொதுமக்களும், வியாபாரிகளும் தொடா் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது ஊழல் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானது. இதில் பொது நிதி இழப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கப்பலூா் சுங்கச் சாவடி சுங்க வரி வசூல் மற்றும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் வகையில், பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ள உடனடியாக மத்திய குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த சுங்கச் சாவடி செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டும். மேலும், இதில் தவறு செய்த பொறுப்பான தனிநபா்களைக் கண்டறிய முறையான விசாரணைக்கு தனிப்பட்ட முறையில் தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்கின்றேன் என பிரதமரை மாணிக்கம் தாகூா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.